பெங்களூரு: ஸ்டார்ட் அப் தொடங்க விரும்புபவர்கள் பெங்களூரு வந்தால் மட்டும் போதும் அவர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என Unbound Fund நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Alessandro Palombo கூறியுள்ளார்.
Unbound Fund என்பது பிட்காயினுக்கான ஒரு ஆலோசனை நிறுவனமாகும். Alessandro Palombo பெங்களூரு நகரில் ஆறு மாதங்கள் தான் வசித்து வந்ததாகவும் இந்த நகரம் இந்தியாவின் முக்கியமான சக்தி என்றும் கூறியுள்ளார். ஆறு மாத காலம் பெங்களூருவில் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பெங்களூரு நகரம் சாதாரணமாக இந்த இடத்தை எட்டி விடவில்லை என தெரிவித்துள்ள அவர் 1981 ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் தன்னுடைய முதல் கேம்பஸை நிறுவி பெங்களூருவின் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கு வித்திட்டது என கூறியுள்ளார். 1990களில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மையமாக பெங்களூரு உருவானது என்றும் தற்போது பெங்களூரில் இருந்து இந்தியாவின் 66% ஐடி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு 158 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கொண்டிருக்கிறது என்றும் 40 யூனிகார்ன் நிறுவனங்களை கொண்டு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் 80 சதவீதம் பெங்களூருவில் தான் அமைந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் இங்கே கிடைக்கும் திறமையான நபர் என கூறியுள்ளார்.
திறமையான நபர்களுக்கான தங்க சுரங்கமாக பெங்களூரு இருக்கிறது என குறிப்பிட்டுள்ள அவர் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பொறியாளர்கள் படிப்பை முடித்து வேலைக்காக வருகின்றனர் அவர்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு இங்கே கிடைக்கிறது எனக் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் மிகப் பெரிய தொழில்களாக உருவாகி இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் தாய்வீடு பெங்களூரு தான் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெங்களூருவில் ஸ்டார்ட் அப்க்கு தேவையான சாதகமான சூழல் நிலவுகிறது என குறிப்பிட்டுள்ள அவர், இது ஒரு யூனிகார்ன் ஃபேக்டரி என பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐடி சேவையில் 66 சதவீதம் பெங்களூரில் இருந்து தான் செல்கிறது என்றும் 76 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மென்பொருள் ஏற்றுமதி பெங்களூரில் இருந்து மட்டுமே நிகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியில் தென்னிந்திய மாநிலங்களின் பங்களிப்பு 31% என்றும் மொத்த மக்கள் தொகையில் 20% பேரை மட்டும் கொண்டு தென்னிந்திய நகரங்கள் இதனை சாதித்து இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தில் பெங்களூரு தான் மையமாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க இடம் தேடிக் கொண்டிருந்தால் கண்டிப்பாக பெங்களூருக்கு வருகை தரலாம் என குறிப்பிட்டுள்ளார். பல்வேறு துறைகளிலும் அரசு 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி தந்துள்ளது மற்ற மேற்கத்திய நகரங்களுடன் ஒப்பிடும்போது வாழ்க்கை செலவினங்கள் 50% வரை பெங்களூருவில் குறைவு அது மட்டும் இன்றி தொழில் தொடங்குவதற்கும் அதனை உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கும் ஏற்ற ஒரு சூழல் இங்கே நிலவுகிறது பெரும்பாலான மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள் என பட்டியலிட்டுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications