பாலிவுட் நடிகை ஆலியா பட்-க்கு அறிமுகம் தேவைப்படுமா என்ன? இருந்தாலும் அவர் நடிகையிலிருந்து இன்று ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபராக உள்ளார் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.
ஆமாங்க, நடிகை ஆலியா பட் உருவாக்கிய நிறுவனம் கடந்த ஒரே ஆண்டில் சுமார் ரூ.150 கோடி லாபம் ஈட்டியுள்ளது என்பது தான் இன்று டாக்-ஆஃப் -தி டவுனாக உள்ளது.
ஆலியா பட் நிறுவனம்!
ஆலியா பட் எட்-ஏ-மம்மா ( Ed-a-Mamma ) எனும் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகளை விற்கும் நிறுவனத்தை கோவிட் காலமான 2020 ஆம் ஆண்டில் தொடங்கினார். அச்சமயத்தில் அதற்கு பெரிய வரவேற்பு இல்லையென்றாலும், ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. மேலும் சென்ற ஆண்டு 2022 இல் நிறுவனம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
10 மடங்கு லாபம்!
இந்நிறுவனம் கடந்த 12 மாதங்களில் அதாவது ஒரே ஆண்டில் சுமார் 10 மடங்கு லாபத்தை ஈடியுள்ளது. ஆலியா பட் எட்-ஏ- மம்மா தொழிலை அவர் கர்பகாலத்தில் ரீ-லான்ச் செய்து அதிக கவனத்துடனும், முனைப்புடனும் செயல்பட்ட ஒரே ஆண்டில் சுமார் ரூ.150 கோடி லாபத்தை ஈட்டியுள்ளார்.
குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகள்
இந்நிறுவனம் 2 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் 800க்கு அதிகமான பொருட்களை தேர்வு செய்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் ஆலியா பட் இந்நிறுவனத்தின் இணை நிறுவனராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது பெரிய பிராண்ட்!
ஆலியா பட்டின் எட்-ஏ-மம்மா ஆடைகளை மிந்த்ரா (Myntra) ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் விற்பனையாகி வருகிறது. அதில் குழந்தைகளுக்கான டாப் 3 பிராண்டுகளில் ஆலியா பட்டின் எட்-ஏ-மம்மா பிராண்டும் ஒன்று.
டாப் கம்பெனிகளின் முதலீட்டாளர்!
ஆலியா பட் நடிகை, தொழிலதிபர் என்பதைத் தாண்டி பிரபல நிறுவனங்களின் முதலீட்டாளராகவும் உள்ளார். ஆலியா பட் Nykaa, StyleCracker மற்றும் Phool.co ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அதில் Phool.co அகர்பத்திகள் மற்றும் Essential Oils எனப்படும் மருத்துவகுணம் நிறைந்த எண்ணெய்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.
ஆலியா பட்டின் சொத்து மதிப்பு!
Forbes தரவுகளின்படி, ஆலியா பட் 2017 ஆம் ஆண்டு ரூ.39.88 கோடியும், 2018 ஆம் ஆண்டில் 58.83 கோடியும் சம்பாதித்துள்ளார். மேலும் 2019 ஆம் ஆண்டு ரூ.59.21 கோடி வருமானம் பெற்றுள்ளார். ஆலியா பட் நடிக்கும் படத்திற்கு ரூ.20 கோடி சம்பளம் வாங்குவதாக தெரிவித்துள்ளது. இவரின் சொத்து மதிப்பு ரூ.299 கோடி எனக் கூறப்படுகிறது.
இவருக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன. அதுமட்டுமின்றி விலை உயர்ந்த கார்களான BMW 7 Series, Audi A6, Audi Q7 மற்றும் Range Rover Vogue உட்பட பல கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.
ஆலியா பட்டின் முதல் வருமானம்!
ஆலியா பட் அவரின் தந்தை மகேஷ் பட்டிற்கு அவரின் கால்களுக்கு கீரிம் தடவி விட்டதற்காக அவர் ரூ.500 சம்பளமாக கொடுத்ததாகவும், அதுதான் ஆலியா பட்டின் முதல் வருமானம் என்று கூறியுள்ளார்.
ஆலியா பட் பெருமிதம்!
இந்த வளர்ச்சி குறித்து ஆலியாபட் மிகவும் பெருமைப்படுவதாகவும், இன்னும் தொழில், அதன் வளர்ச்சி குறித்து கற்றுக் கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். அவரின் ஒரு சிறிய கனவு இப்பொழுது 150 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதை நினைத்து மிகவும் பெருமிதம் கொள்வதாகவும் ஆலியா பட் கூறியுள்ளார்.
ஆலியா பட்-ரன்பீர் கபூர் திருமணம்!
பாலிவுட்டின் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் பிரம்மாஸ்திரா படத்தில் முதன்முதலில் ஒன்றாக நடித்தனர். அந்த படத்திற்கு பிறகு காதலிக்கத் தொடங்கிய இந்த ஜோடி 2022-இல் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் அவர்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications