பிரம்மாண்ட ஈகாமர்ஸ் தள்ளுபடி விற்பனைக்குப் பெயர்போன சீனாவில், அலிபாபா நிறுவனம் தனது முக்கியமான சிங்கிள் டே விற்பனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
11 நாட்கள் நடத்தப்படும் இந்தத் தள்ளுபடி விற்பனையில் சீனாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா 540.3 பில்வியன் யுவான் அதாவது 84.54 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது.
வெறும் 11 நாளில் 84.54 பில்லியன் டாலர் என்றால் ஒரு நாளுக்குக் கிட்டதட்ட 7.68 பில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு நாளுக்கு 5,71,929 கோடி ரூபாய் வர்த்தகம்.
ஆனால் இது அலிபாபாவின் சிங்கிள் டே வர்த்தகத்தில் வரலாற்றுச் சரிவு என்றால் உங்களால் நம்ப முடியுமா..?
அலிபாபா சிங்கிள் டே
அலிபாபா 2021ஆம் ஆண்டின் சிங்கிள் டே விற்பனையில் சுமார் 84.54 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 14 சதவீதம் அதிகமாகும். ஆனால் அலிபாபா சிங்கிள் டே வர்த்தகத்தில் இதுதான் குறைவான வளர்ச்சி அளவீடு என அலிபாபா தெரிவித்துள்ளது.
சீனாவில் நுகர்வோர் அளவு
சீனாவில் நுகர்வோர் அளவுகள் குறைந்துள்ள காரணத்தாலும், அலிபாபா பெரிய அளவில் விளம்பரப்படுத்தாத காரணத்தாலும் விற்பனை அளவில் பெரிய அளவிலான வளர்ச்சி அடையாமல் உள்ளது. சிங்கிள் டே விற்பனையைத் துவங்குவதற்கு முன்பாகவே அலிபாபா இந்த வருடம் மொத்த விற்பனை அளவு குறைவாகவே இருக்கும் எனக் கணித்து இருந்தது.
ரீடைல் விற்பனை
சீனாவில் தற்போது ரீடைல் விற்பனை சரிந்துள்ளது, விநியோக பிரச்சனைகள் அதிகரித்துள்ளது, மின்சாரத் தட்டுப்பாடு, கோவிட் லாக்டவுன் எனப் பல பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் உற்பத்தி விலை அதிகரித்துள்ளதோடு, விற்பனையும் சரிந்துள்ளது.
சிங்கிள் டே விற்பனை
அலிபாபா 2009ல் சிங்கிள் டே விற்பனையைத் துவங்கி உலகிலேயே மிகப்பெரிய ஆன்லைன் விற்பனையாக மாற்றியது. முதல் வருடத்திலேயே சைபர் மண்டே விற்பனை அளவீட்டை முந்தியது. கடந்த ஆண்டு இதை 11 நாள் விற்பனையாக மாற்றியது அலிபாபா.
சீன அரசு நடவடிக்கை
கடந்த ஆண்டுச் சிங்கிள் டே விற்பனையில் 74 பில்லியன் டாலர் வர்த்தகத்தைப் பெற்ற அலிபாபா இந்த ஆண்டு 84.54 பில்லியன் டாலர் வர்த்தகத்தைப் பெற்றது. சீன அரசின் நடவடிக்கையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட அலிபாபா இந்தச் சிங்கிள் டே விற்பனையில் மீண்டு உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
ஈகாமர்ஸ்
இந்தியாவை விடவும் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையைக் கொண்ட நாடாகச் சீனா இருக்கும் வேளையில் அலிபாபாவின் சிங்கிள் டே விற்பனை மிகப்பெரிய மாற்றத்தை அந்நாட்டில் ஏற்படுத்தி வருகிறது. சீனா முழுவதும் ஈகாமர்ஸ் வர்த்தகம் விநியோகம் விரிந்துள்ள நிலையில் ஒரு பொருளைத் தென் முனையில் இருந்து வட முனைக்கு ஓரிரு நாட்களில் டெலிவரி செய்ய முடியும்.
லைவ் ஸ்ட்ரீமிங் விற்பனை
இதனாலேயே சீனாவில் ஈகாமர்ஸ் தள்ளுபடி விற்பனையை அந்நாடு அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாகச் சீனாவில் டிஜிட்டல் சேவை தளங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க பிரபலங்கள் லைவ் ஸ்ட்ரீமிங் விற்பனையை அதிகளவில் செய்யப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications