மும்பை: நடப்பு நிதியாண்டில் உலகளாவிய அளவில் பரவி வரும் கொரோனாவினால் தொழில் துறைகள், நிறுவனங்கள் பெரும்பாலும் சமீப காலம் வரை மூடப்பட்டு இருந்தன. எனினும் தற்போது லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை வைத்து பணியாற்றி வருகின்றன.
எனினும் அவைகள் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியையும், வருவாய் இழப்பினையும் சந்தித்து வருகின்றனர்.
இதில் பல்வேறு துறைகளில் பெரும் பின்னடைவை கொடுத்தாலும், ஐடி துறைகளில் சற்று தளர்வினை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி காணுமா?
ஏனெனில் ஐடி துறையினை பொறுத்தவரையில் பெரும்பாலான நிறுவனங்கள் லாக்டவுன் காலத்தில் இருந்தே, ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றும் படி கூறி வருகின்றன. கடந்த 2019 -20ம் நிதியாண்டில் இந்தியாவின் மென்பொருள் துறையானது 8.1 சதவீத வளர்ச்சியுடன் 147 பில்லியன் டாலர் மதிப்பினைக் கொண்டிருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் இந்த வளர்ச்சியினைக் காணுமா? என்பது சந்தேகம் தான் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தேவையானது சரிவு
ஏனெனில் ஐடி துறையின் தேவையானது குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டில் வளர்ச்சியானது மந்தமாகவே இருக்கும் சூழல் உள்ளது. இதன் காரணமாக புதிய ஒப்பந்தங்கள் கூட குறைந்துள்ளதாக சில அறிக்கைகள் கூறுகின்றன. இதன் காரணமாக ஐடி துறையில் முதலீடுகள் எப்போதும் போல இருக்குமா? என்பதும் சந்தேகமாகத் தான் உள்ளது.
அலிபாபா கிளவுட் முதலீடு
எனினும் டிஜிட்டல் மற்றும் கிளவுட் சர்வீசஸ் சற்று மேம்படலாம் என்றும் சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக கிளவுட் சர்வீசஸ், டிஜிட்டல் துறைகளில் மேம்படுத்தும் விதமாக சில நிறுவனங்கள் முதலீடுகளை செய்து வருகின்றன. இதற்கிடையில் தான் அலிபாபா கிளவுட் சேவையானது இந்த நிதியாண்டில் 283 மில்லியன் அமெரிக்கா டாலரை முதலீடு செய்ய போவதாக கடந்த செவ்வாய்கிழமையன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதலீடு எதற்கு?
இந்த முதலீட்டின் மூலம் தகவல் தொடர்பு திறனை அதிகரிப்பதற்காகவும், கூட்டாளர்களுடன் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பணி செயல்முறையை அறிமுகப்படுத்துவதை அலிபாபா கிளவுட் நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் பதிலளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா தாக்கம் மக்களை சூழ்ந்துள்ள நிலையில் இதனை போன்ற நிலைகளில் இது பெரிதும் பயன்படும் எனவும் அலிபாபா கிளவுட் தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் சேவை
அலிபாபா குழுமத்தின் முதுகெலும்பான அலிபாபா கிளவுட் சேவை, உள்கட்டமைப்பு உலகளவில் 3,50,000க்கும் மேற்பட்ட வணிக வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கி வருகிறது. இது 10,000 மேற்பட்ட உலகளாவிய கூட்டாளர்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது. இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெரும் அளவில் முதலீட்டினை செய்துள்ளது.
கூட்டுத் தீர்வு
மேலும் மோங்கோடிபி (MongoDB), இன்டெல் (intel), விஎம்வேர் (VMware), சேல்ஸ்ஃபோர்ஸ், (salesforce), சாப் (SAP), ரெட் ஹாட் (red hat), fortinet (ஃபோர்டினெட்) உள்ளிட்ட கூட்டாளர்களுடன் இணைந்து அலிபாபா கிளவுட், புதிய சில்லறை வர்த்தகம், ஃபின்டெக், உற்பத்தி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற தொழில்களுக்கு 500க்கும் மேற்பட்ட கூட்டுத் தீர்வுகளை உருவாக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
வளர்ந்து வரும் கிளவுட் சந்தை
சீனா மற்றும் இந்தோனேசியாவுக்கு பிறகு அடுத்து வேகமாக வளர்ந்து வரும் கிளவுட் சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும். இது மட்டும் அல்ல, தற்போது அனைத்து சிறந்த கிளவுட் வழங்குநர்களிடமிருந்தும் முதலீடுகளை ஈர்க்கிறது. அலிபாபா கிளவுட், கூகுள் கிளவுட் இந்தியாவில் தற்போது இரண்டு தளங்களை வழங்குகின்றன.
வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்
பல நிறுவனங்கள் இருக்கும் பணியாளர்களையே செலவு குறைப்பினை காரணம் காட்டி வீட்டுக்கு அனுப்பி வரும் நிலையில், இதுபோன்ற ஊக்குவிப்பு முதலீடுகள் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க உதவுவதோடு, நிறுவனத்தினை விரிவாக்கம் செய்யவும் பயன்படும். ஆக மொத்தத்தில் கொரோனா காலத்திலும் ஐடி ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயமே.
More From GoodReturns

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications