உலகின் முன்னணி சில்லறை நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜாக் மா, தான் எப்போதும் எந்தவொரு கருத்தை கூறினாலும், அது சர்ச்சைக்கு உள்ளாகி, பின் அனைவரிடமும் வசை வாங்கிக் கொள்வதே இவரின் வழக்கம்.
அந்த வகையில் உலகம் முழுவதும் அறியப்பட்ட சுவாரஸ்யமான மனிதர்களில் ஜாக் மாவும் ஒருவர். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான இவர், அலிபாபா நிறுவனத்தை கடந்த 1999ம் ஆண்டு 17 பேருடன் சேர்ந்து தொடங்கினார். சீனாவை ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வணிகம் பக்கம் திருப்பியதில் இவரின் பங்கு பெரும் அளவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் சீனாவின் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு முக்கிய காரணம் இவர் தான். உலகப் பணக்காரர்களில் ஒருவரான இவர், இன்று இந்தியாவில் முகேஷ் அம்பானி எப்படியோ, அதே போல் தான் சீனாவில் ஜாக்மாவும் ஒருவர்.
இந்த நிலையில் இவர் அமெரிக்கா சீனா வர்த்தக போர் பற்றிய அவரது கருத்தினை கூறியுள்ளார். அதில் அமெரிக்கா சீனா ஆகிய இரு வல்லரசுகளும் எப்படி தங்களது வல்லரசுகளை கையாளுகிறார்கள் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அமெரிக்கா - சீனா உறவானது 20 ஆண்டுகால கொந்தளிப்பை எதிர்கொள்ளக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் கடந்த வியாழக்கிழமையன்றும் ஃப்ளும்பெர்க் டிவிக்கு அளித்த பேட்டியில் ஜாக்மா இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் நாம் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். மேலும் மேலும் அதிக பிரச்சனைகளை வளர்த்துக் கொள்ள கூடாது. ஒரு முழு அளவிலான வர்த்தகப்போர் நீண்டகாலம் நீடிக்காது என்றாலும், அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு உறவுகள் பாறைகளாக முடியும். மேலும் இந்த இரு வல்லரசு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும், தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்வதற்குமான முக்கியத்துவத்தையும் ஜாக்மா வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் வர்த்தக போரால், 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இருதரப்பு வர்த்தகத்திலும் சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் வாரங்களில் இரு நாடுகளும் பேசி சில பிரச்சனைகளையாவது தீர்க்காவிட்டால், அடுத்து அரும் டிசம்பர் 15ம் தேதி வெள்ளை மாளிகை 160 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன இறக்குமதி பொருட்களுக்கு 15 சதவிகித வரி விதிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே அலிபாபா நிறுவனத்தில் அதன் பங்கு மதிப்பு குறைந்துள்ள நிலையில், இது இன்னும் சரியலாம் என்றும் ஜாக்மா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications