வாயால் கெட்ட ஜாக் மா.. ஓரே வருடத்தில் 344 பில்லியன் டாலர் ஹோகயா..!

ஒருகாலத்தில் உலகத்தின் ஒட்டுமொத்த ஈகாமர்ஸ் சந்தையும் சீனா-வின் அலிபாபா தான் ஆளப்போகிறது என்ற நிலை இருந்தது யாராலும் மறுக்க முடியாது. ஆனால் பல முன்னணி ரீடைல் மற்றும் ஈகாமர்ஸ் குறுகிய காலத்தில் தனது ஈகாமர்ஸ் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்தது.

இதனால் உலக நாடுகளில் அலிபாபா-வின் ஆதிக்கம் குறைந்தாலும், சீனாவில் அசைக்க முடியாமல் இருந்த அலிபாபா நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 344 பில்லியன் டாலர் அளவில் குறைந்துள்ளதுள்ளது.

1 பில்லியன் டாலர் என்றால் 7,500 கோடி ரூபாய்.. அப்போ 344 பில்லியன் டாலர் என்றால்..?

அலிபாபா நிறுவனம்

அலிபாபா நிறுவனம்

அலிபாபா நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து அதன் நிறுவனரான ஜாக் மா விலகிய பின்பு ஜப்பான் சாப்ட் பேங்க் நிறுவனத்துடன் இணைந்து 100 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டுத் திட்டத்தைக் கையாண்டு வெற்றி வாகை சூடினார்.

அலிபாபா ஆதிக்கம்

அலிபாபா ஆதிக்கம்

ஒருபக்கம் அலிபாபா ஈகாமர்ஸ் மட்டும் அல்லாமல் நிதி சேவை சந்தையிலும் மிகப்பெரிய வர்த்தகத்தையும் உருவாக்கிய நிலையில் உலகிலேயே மிகப்பெரிய ஐபிஓ திட்டத்தை வெளியிட அலிபாபா குழுமத்தின் ஆன்ட் குரூப் தயாராகிக் கொண்டு இருக்கும் போது தான் ஜாக் மா சீன அரசை விமர்சனம் செய்ய வாயைத் திறந்தார், இங்குத் துவங்கியது பிரச்சனை..

 ஆன்ட் குரூப் ஐபிஓ

ஆன்ட் குரூப் ஐபிஓ

ஆன்ட் குரூப் ஐபிஓ வெளியிடுவதற்குச் சில வாரங்களே இருக்கும் நிலையில் சீனாவின் மிகப்பெரிய நிதியியல் சந்தை கூட்டத்தில் ஜாக் மா சீனா அரசு குறித்தும், சீன வங்கிகள் குறித்தும், சீன நிதியியல் அமைப்பு குறித்தும் விமர்சனம் செய்து பேசினார்.

ஜாக் மா பேச்சு

ஜாக் மா பேச்சு

ஜாக் மா பேசிய அடுத்த சில நாட்களில் சீனா அரசின் நிதி அமைப்பு ஆன்ட் குரூப் அரசின் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாத காரணத்தால் ஐபிஓ-வை சீனா மற்றும் ஹாங்காங் சந்தையில் தடைவிதித்தது. இதுமட்டும் அல்லாமல் அலிபாபா, ஆன்ட் குருப் ஆகிய இரு நிறுவனத்தின் மீதும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளைச் சுமத்தி மொத்த நிர்வாகத்தையும் சீன அரசு தனது கண்காணிப்பில் கொண்டு வந்தது.

சீன அரசு அதிரடி

சீன அரசு அதிரடி

இதன் பின் அலிபாபா குழுமம் செய்த சிறு தவறுகள் முதல் பெரிய தவறுகள் வரையில் அனைத்தையும் கண்டுபிடித்த சீன அரசு ஆன்ட் குரூப் மோனோபோலியாகச் செயல்படுகிறது என்றும், போட்டி நிறுவனங்களை வளர விடாமல் செய்கிறது என்றும் குற்றம்சாட்டி டேட்டா நிர்வாகம் முதல் நிர்வாகப் பணிகள் வரையில் அனைத்து பிரிவிலும் அரசு அதிகாரிகளை நியமித்தது.

4 பில்லியன் டாலர் அபராதம்

4 பில்லியன் டாலர் அபராதம்

இதன் பின்பு 4 பில்லியன் டாலர் அளவிலான அபராதமும் விதித்தது, இதற்கிடையில் சீன அரசு அனைத்து தனியார் டெக் நிறுவனத்தையும் அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அடுக்கடுக்காகக் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்தது. இந்தப் பிரச்சனையிலும் அலிபாபா ஆடம் கண்டது.

அலிபாபா சந்தை மதிப்பு

அலிபாபா சந்தை மதிப்பு

இப்படிக் கடந்த ஒரு வருடமாகச் சீனா அரசு அலிபாபா, ஆன்ட் குரூப் மற்றும் அதன் கிளை நிறுவனங்களை வைச்சுச் செஞ்சிக்கொண்டு வந்ததில் அலிபாபா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பில் பெரும் ஓட்டை விழுந்துள்ளது.

344 பில்லியன் டாலர் இழப்பு

344 பில்லியன் டாலர் இழப்பு

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அலிபாபா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 344 பில்லியன் டாலர் அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய சரிவை கண்ட நிறுவனத்தில் அலிபாபா முதல் இடத்தில் உள்ளது.

பிற சீன நிறுவனங்கள்

பிற சீன நிறுவனங்கள்

சீன அரசின் டெக் நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கையில் அலிபாபா மட்டும் அல்லாமல் பல முன்னணி சீன நிறுவனத்தின் சந்தை மதிப்பு குறைந்துள்ளது

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+