ஈகாமர்ஸ், சப்ளை செயின், பின்டெக், டிஜிட்டல் டெக்னாலஜி என பல துறையில் உச்சத்தை தொட்டு இருக்கும் அலிபாபா குழுமத்திற்கு சீன அரசுடன் இருக்கும் பிரச்சனைகள் குறைந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் மாபெரும் வர்த்தக திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ள அலிபாபா தனது சாம்ராஜ்ஜியத்தை 6 ஆக உடைத்து அடுத்தடுத்து நிறுவனங்களை ஐபிஓ வெளியிடும் மாபெரும் திட்டத்தை வகுத்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உலகமும் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஏற்கனவே பல துறையில் அடிமட்டத்தில் பயன்படுத்தி வந்தாலும், தற்போது வாடிக்கையாளர் மத்தியில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது அலிபாபா. இதற்காக அலிபாபா குரூப் ஹோல்டிங் நிறுவனம் புதிதாக ChatGPT போல் AI large language மாடலான Tongyi Qianwen என்ற தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

Tongyi Qianwen தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் OpenAI நிறுவனத்தின் ChatGPT, கூகுள்-ன் Bard போலவே இயங்கும். மேலும் அலிபாபா இதனை தனி ப்ராடெக்ட் ஆக அறிமுகம் செய்வதை காட்டிலும் தனது வர்த்தகத்தில் பயன்படுத்திக்கொண்டு எதிர்கால வளர்ச்சி வலிமையாக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு அலிபாபா சேவையிலும் இனி Tongyi Qianwen இருக்கும்
ChatGPT, Bard, Tongyi Qianwen ஆகிய அனைத்திற்கும் அடிப்படையே GPT எனப்படும் Generative Pre-trained Transformer தான். இது டீப் லேர்னிங் (deep learning) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்கள் கேட்கும் கேள்விக்கு மனிதர்களை போலவே இயந்திரம் பதில் அளிக்கும். இதை தற்போது Text முறையில் மட்டுமே அளிக்கிறது, விரைவில் ஆடியோ பார்மெட்டிலும் பதில் அளிக்கும் செயல்முறை வரலாம்.
மெஷின் லேர்னிங், natural language processing (NLP), deep learning ஆகிய 3 முக்கிய தொழில்நுட்பத்தின் கலவை தான் GPT. இதை OPENAI என்ற நிறுவனம் தான் முதலில் உருவாக்கியது, OPENAI நிறுவனத்தின் துவக்கத்தில் எலான் மஸ்க் இதில் முக்கிய நிறுவனராகவும், தொழில்நுட்ப ஆலோசகராகவும் இருந்தார். ஆனால் பின்னாளில் AI எழுச்சி, மனிதர்களை விடவும் சிறப்பாக செயல்படுபவதை கண்டு பயந்து வெளியேறினார்.

இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்களான ChatGPT, Bard-க்கு போட்டியாக சீனாவில் Baidu நிறுவனம் Ernie என்ற GPT தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில் அலிபாபாவும் வந்துள்ளது. அலிபாபா குழுமம் ஈகாமர்ஸ், சப்ளை செயின், பின்டெக் துறையில் செய்த புரட்சியை Tongyi Qianwen மூலம் AI துறையிலும் செய்தால் சீன சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையிலும் ஆதிக்கம் செலுத்த முடியும்.
அலிபாபா முதலில் இந்த AI தொழில்நுட்பமான Tongyi Qianwen-ஐ அதன் முக்கிய சேட்டிங் ஆப் தளமான DingTalk உடன் இணைக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து அலிபாபாவின் voice assistant சேவையான Tmall Genie உடன் இணைக்கப்பட உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications