சீன அரசு உடனான பிரச்சனைகள் தீர்ந்த நிலையில் அலிபாபா பெரும் திட்டத்துடன் களத்தில் மீண்டும் இறங்கியுள்ளது, ஒருபக்கம் அரசு நெருக்கடி இருந்தாலும் அதை சமாளிக்கும் வகையில் புதிய திட்டத்தை தீட்டியது மட்டும் அல்லாமல் 2 வருட சரிவையும், இழப்பையும் ஈடுசெய்ய மாஸ்டர் பிளான் போட்டு உள்ளது.
இதில் முக்கியமாக அலிபாபா குழுமத்தின் வர்த்தகத்தை 6 பிரிவுகளாக உடைத்து தனித்தனி நிறுவனங்களாக பிரிப்பது மட்டும் அல்லாமல் அடுத்தடுத்து இந்த நிறுவனங்களை ஐபிஓ வெளியிட முடிவு செய்ததோடு ஹோல்டிங் நிறுவன கட்டமைப்புக்குள் சென்றுள்ளது. இது பெரும் மாற்றமாக பார்க்கப்படும் நிலையில் இதை சுற்றி பல சந்தேகம் முதலீட்டாளர்களுக்கு உள்ளது.

உலகமே பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நாணய கொள்கையை இறுக்கி வரும் வேளையில் சீனா மட்டும் அதிகப்படியான தளர்வுடனே வைத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சீன பொருளாதாரம், நிதி நிலை வளர்ச்சி அளவுகள் குறித்து பல கேள்விகள் சுற்றிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் அலிபாபா தனது நிறுவனத்தை 6 ஆக உடைக்க திட்டமிட்டு உள்ளதை பாராட்டும் வேளையில் அலிபாபா நிறுவனத்தில் அதிகம் முதலீடு செய்திருக்கும் ஜப்பான் சாப்ட்பேங்க் கார்ப், அலிபாபா பங்கு இருப்பை அதிகளவில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

சாப்ட்பேங்க் நிறுவனத்தின் மொத்த முதலீட்டு போர்ட்போலியோவில் பெரும் பங்கை அலிபாபா கொண்டு உள்ளது. தற்போது அலிபாபா பங்குகளை சாப்ட்பேங்க் விற்பனை செய்யப்போகிறது என செய்தி வெளியான நிலையில் ஹாங்காங் சந்தையில் சுமார் 5.1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இது அலிபாபா நிறுவனர் ஜாக் மா-வுக்கு பெரும் அதர்ச்சியாக இருக்கும்.

அலிபாபா ஜாக் மா, சாப்ட்பேங்க் மசயோஷி சன் ஆகியோரும் நீண்ட கால நண்பர்கள். சாப்ட்பேங்க் 20 வருடத்திற்கு முன்பு வெறும் 20 மில்லியன் டாலர் தொகைக்கு வாங்கிய அலிபாபா பங்குகள் இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வருடம் மட்டும் சாப்ட்பேங்க் தலைவர் மசயோஷி சன் சுமார் 7.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தார்.
அமெரிக்க பங்குசந்தையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள அறிக்கையின் படி சாப்ட்பேங்க் அலிபாபா பங்கு இருப்பை 3.8 சதவீதம் வரையில் குறைக்க உள்ளதாக FT தெரிவித்துள்ளது. சாப்ட்பேங்க் கடந்த வருடம் அலிபாபா பங்கு இருப்பை 23.7 சதவீதத்தில் இருந்து 14.6 சதவீதமாக குறைத்தது மூலம் சுமார் 34 பில்லியன் டாலரை பெற்றது, இதை தொடர்ந்து தற்போது 3.8 சதவீதம் வரையில் குறைக்க உள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications