சீனாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அலிபாபா குழுமத்தின் ஈகாமர்ஸ் தளத்தில் ஒவ்வொரு வருடமும் சிங்கிள்ஸ் டே சிறப்பு விற்பனை மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகிறது. இந்த வகையில் இந்த வருடத்தின் சிங்கிள்ஸ் டே விற்பனையில் சுமார் 56 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தக்தை அலிபாபா குழுமம் பெற்றுள்ளது.
உலகமே எதிர் பார்த்து வந்த அலிபாபாவின் நிதியியல் சேவை பிரிவு ஆன்ட் குரூப்-ன் 35 பில்லியன் டாலர் வரலாற்று ஐபிஓ திடீரெனச் சீன அரசு முடக்கிப் பல கோடி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுமட்டும் அல்லாமல் ஆன்ட் குரூப் 35 பில்லியன் டாலர் ஐபிஓ திட்டத்திற்குச் சுமார் 3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ கோரிக்கை வந்த நிலையில் சீனா, ஹாங்காங் சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் அனைத்து முதலீட்டாளர்களும் கவனத்தை ஈர்த்தது.
76 பில்லியன் டாலர் மாயம்
சீன அரசின் ஆன்ட் குரூப்-ன் திடீர் தடையின் காரணமாக அலிபாபா குழுமத்தின் மதிப்பு சீன பங்குச்சந்தையில் சுமார் 76 பில்லியன் டாலர் சரிந்தது. அரசே இந்நிறுவனத்தை எதிர்த்த நிலையில் ரீடைல் முதலீட்டாளர்கள் அரசின் மீது உள்ள பயத்தின் காரணமாகப் பங்குகளை விற்று ஓடினர். இதன் காரணமாகவே அலிபாபா குழுமத்தின் சந்தை மதிப்பு 76 பில்லியன் டாலர் சரிந்தது.
2 சிறப்பு விற்பனை
அலிபாபா தளத்தில் நவம்பர் மாதம் மட்டும் சிங்கிள்ஸ் டே பெயரில் 2 சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் விற்பனை நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரையிலும் 2வது விற்பனை நவம்பர் 11ஆம் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டது.
56 பில்லியன் டாலர்
சீனா நேரத்தின் படி நவம்பர் 11ஆம் தேதி 12.30 மணியளவில் கணக்கிட்ட போது சுமார் 372.3 பில்லியன் யுவான் அதாவது டாலர் மதிப்பில் 56.3 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை அலிபாபா தளம் செய்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் ஒரு நொடிக்கு 5,83,000 ஆர்டர்கள் அலிபாபா தளத்தில் வந்து குவிந்து வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
20 லட்சம் புதிய பொருட்கள்
இந்தச் சிறப்பு விற்பனைக்காக அலிபாபா புதிதாகத் தனது ஈகாமர்ஸ் தளத்தில் சுமார் 20 லட்சம் பொருட்களைப் புதிதாகப் பட்டியலிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.
சராசரியாக ஒரு வாடிக்கையாளர் 1000 யுவான் முதல் 10000 யுவான் வரையில் இந்தச் சிங்கிள்ஸ் டே விற்பனையில் செலவு செய்வதாக ஆய்வுகள் கூறுகிறது.
சோகத்திலும் நன்மை
அலிபாபா குழுமம் ஆன்ட் குரூப்-ன் ஐபிஓ தடையும், அதனால் ஏற்பட்டுள்ள 76 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பு பாதிக்கப்பட்டு உள்ள இந்தச் சூழ்நிலையில், 56 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் அலிபாபாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தெரிகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications