இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் சேவை நிறுவனமான பேடிஎம்-ன் ஆரம்பக்கால முதலீட்டாளரான சீனாவின் அலிபாபா குழுமம், அதன் பங்கு இருப்பை மொத்தமாக விற்பனை செய்துவிட்டு வெளியேறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரையில் 6 சதவீதத்திற்கும் அதிகமான பேடிஎம் பங்குகளை வைத்திருந்த அலிபாபா அடுத்தடுத்த விற்பனை மூலம் பங்கு இருப்புப் பூஜ்ஜியத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கடைசியாகப் பேடிஎம் ஃபின்டெக் நிறுவனத்தில் இன்று 3.4% பங்குகளை விற்றுள்ளது இந்நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறியுள்ளது.
ஆனால் பேடிஎம் நிறுவனத்தில் அலிபாபா-வின் கிளை நிறுவனமான ஆன்ட் பைனான்சியல் அதிகளவிலான பங்குகளை வைத்துள்ளது.
அலிபாபா
இன்று சீனாவின் அலிபாபா குழுமம் இந்திய பங்குச்சந்தையில் பிளாக் டீல் வாயிலாக Paytm இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் 3.4 சதவீத பங்குகள் அல்லது 2.1 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் சீனாவின் பன்னாட்டு நிறுவனமான அலிபாபா தனது முழுப் தொகுதி பங்குகளையும் விற்றுள்ளது.
பிளாக் டீல்
இந்தப் பிளாக் டீல் தொடர்ந்து, பேடிஎம் பங்குகளின் விலை 9 சதவீதம் சரிந்து 646 ரூபாயாக இருந்தது. அலிபாபா டிசம்பர் காலாண்டின் இறுதியில் Paytm இல் 6.26% பங்குகளை வைத்திருந்தது மற்றும் ஜனவரியில் திறந்த சந்தை வழியாக சுமார் 3 சதவீத பங்குகளை விற்றது குறிப்பிடத்தக்கது.
பேடிஎம் பங்குகள்
அலிபாபா நிறுவனத்தின் முதலீடுகளின் மதிப்புக் கூர்மையாகச் சரிந்து வருவதற்கு மத்தியில் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நியூ ஏஜ் தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கியமான ஒன்றாக விளங்கும் பேடிஎம் பங்குகளை விற்பனை செய்துள்ளது. அலிபாபா நிறுவனம் நவம்பர் 2022ல் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான Zomato-வில் 3% பங்குகளை விற்பனை செய்தது.
பேடிஎம் லாபம்
அலிபாபாவின் இன்றைய பிளாக் டீல் விற்பனை மூலம் பேடிஎம் பங்குகள் டிசம்பர் காலாண்டில் இயக்க லாபத்தை அறிவித்த பிறகு ஏற்பட்ட உயர்வை மொத்தமும் பஞ்சராக்கியுள்ளது. பேடிஎம் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் நிகர இழப்பு ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.779 கோடியிலிருந்து ரூ.392 கோடியாகக் குறைந்துள்ளது.
ஓன்97 கம்யூனிகேஷன்ஸ்
பேடிஎம் பிராண்டின் தாய் நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பங்குகளை அலிபாபா மொத்தமாக விற்பனை செய்திருந்தாலும். இதன் கிளை நிறுவனமான ஆன்ட் பைனான்சியல் சுமார் 25 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications