சீனா-வில் ஜி ஜின்பிங் அரசின் அடக்குமுறையால் அதிகம் பாதிக்கப்பட்ட பல நிறுவனங்களில் முக்கியமானதும், முதன்மையானதும் அலிபாபா தான். அலிபாபா நிறுவனர் ஜாக் மா அரசையும், அந்நாட்டு நிர்வாகத்தையும் விமர்சித்து பேசிய பின்பு உலகின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிட காத்திருந்த ஆன்ட் பைனான்சியல் நிறுவனத்தின் ஐபிஓ-வை நிறுத்தியது சீன அரசு.
இதை தொடர்ந்து தான் சீன அரசு டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்க பல முக்கியமான முயற்சிகளை எடுத்து ஒட்டுமொத்த டெக் நிறுவனங்களையும், அரசின் அதிகாரத்திற்கு கட்டுப்படும் வகையில் கொண்டு வந்தது ஜி ஜின்பிங் அரசு.
இந்த நிலையில் அலிபாபா நிறுவனம் பல வருடத்திற்கு பின்பு சீன அரசு அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டு வந்து, மாபெரும் வளர்ச்சி திட்டத்தை தீட்டி தனது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.
அலிபாபா குழுமம்
சீனாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுமம் தனது 220 பில்லியன் டாலர் சாம்ராஜ்ஜியத்தை ஆறு வணிக பிரிவுகளாக பிரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அலிபாபா ஈகாமர்ஸ் மட்டும் அல்லாமல் பல துறையில் பல பிரிவுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. இதன் அடிப்படையில் ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் 6 தனி பிரிவுகளாக பிரிக்க உள்ளது.
6 பிரிவுகள்
அலிபாபா சாம்ராஜ்ஜியம் தற்போது cloud intelligence, global digital business, Taobao Tmall online shopping, meal delivery, the Cainiao logistics group, digital media and entertainment என 6 பிரிவுகளாக உடைகிறது. இதில் தற்போதைய குரூப் சிஇஓ-வான Daniel Zhang - cloud intelligence பிரிவையும், தாய் நிறுவனத்தையும் தலைமையேற்று நடத்த உள்ளார்.
பலன்
பெரிய நிறுவனத்தை பல பிரிவுகளாக உடைப்பது வாயிலாகவும், தனி நிர்வாகத்தை அமைப்பது வாயிலாகவும் வேகமாகவும், அதே நேரத்தில் பெரிய அளவிலும் வளர்ச்சி அடைய முடியும். இது மட்டும் அல்லாமல் இந்த 6 பிரிவுகளையும் ஐபிஓ வெளியிடும் திட்டத்துடனும் அலிபாபா இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அலிபாபா நிறுவனர் ஜாக் மா
சமீபத்தில் அலிபாபா நிறுவனர் ஜாக் மா சீனாவை விட்டு நீண்ட காலம் வெளியே இருந்த நிலையில் திங்கட்கிழமை சீனாவில் பொதுவெளியில் காணப்பட்டார், இதேவேளையில் அலிபாபா மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளதால் அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட்டின் அமெரிக்கப் பங்குகள் 13% வரை உயர்ந்து செவ்வாய்க்கிழமை ஆரம்பக்கட்ட வர்த்தகத்தில் அலிபாபா பங்குகள் 97.16 டாலர் வரையில் உயர்ந்தன.
வளர்ச்சி
இந்த நடவடிக்கை சீன நிறுவனமான அலிபாபா முக்கிய பிரிவுகளை ஈ-காமர்ஸ் தனியாக விட்டுவிட்டு, மீடியாவிலிருந்து கிளவுட் வரை அதிகப்படியான சுதந்திரத்துடன் செயல்பட வழி வகுத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் அலிபாபா தனது எதிர்கால வளர்ச்சிக்கு இதன் மூலம் மிகவும் எளிதாக அடித்தளமிட முடியும்.
ஹோல்டிங் கம்பெனி கட்டமைப்பு
சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்தியில் ஹோல்டிங் கம்பெனி கட்டமைப்பிற்கு மாறுவது என்பது மிகவும் அரிதானது, இந்த மாடல் வெற்றி அடையும் பட்சத்தில் அலிபாபாவின் மாடல் சீனாவின் பிற பெரிய நிறுவனங்களுக்கு வழிக்காட்டுவதை தாண்டி ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கும்.
சீன அரசு ஒடுக்குமுறை
சீன தொழில்நுட்பத் துறையில் சீன அரசின் கடுமையான ஒடுக்குமுறையின் போது அந்நாட்டு டெக் நிறுவனங்கள் தனது வணிகத்தையும், முடிவெடுக்கும் அதிகாரத்தையும் ஒரு தலைமையின் கீழ் வைக்காமல் Decentralizing செய்ய வேண்டும் என்பது முதன்மை இலக்குகளில் ஒன்றாக இருந்தது.
அலிபாபா பங்குகள்
அலிபாபா பங்குகள் உயர்ந்தது போல டென்சென்ட் நிறுவனத்தின் அமெரிக்க பங்குகள் 7.3% வரை உயர்ந்தன, அதே நேரத்தில் சீன சரச் இன்ஜின் நிறுவனமான Baidu Inc. இன் பங்குகள் 4.7% வரை அதிகரித்தன.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications