உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சியை எப்படிக் கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கும் நிலையில், சீனா முதல் நாடாகக் கிரிப்டோ உற்பத்தியில் துவங்கி, வர்த்தகம், முதலீடு, பேமெண்ட் என அனைத்தையும் மொத்தமாகத் தடை செய்தது.
இந்நிலையில் சீனாவின் முன்னணி டெக் நிறுவனங்கள் முதல் தொழில்நுட்ப வல்லுனர்கள் வரையில் அனைவரும் மெட்டாவெர்ஸ் மற்றும் NFT துறையில் பெரிய அளவில் ஈடுப்பாடு காட்டி வருகின்றனர்..
ஆன்ட் குரூப், டென்சென்ட்
சீனாவில் ஆன்ட் குரூப், டென்சென்ட் ஹோல்டிங்க்ஸ் உடன் பல ஸ்டார்ட்அப் மற்றும் டெக் வல்லுனர்கள் மெட்டாவெர்ஸ் மற்றும் NFT துறையில் மிகவும் ஆர்வத்துடன் பெரிய திட்டத்தைக் கையில் எடுத்து வருகின்றனர். இத்துறையில் புதிய வர்த்தக வாய்ப்பை உருவாக்கவும், அதன் மூலம் மீண்டும் சந்தையில் ஆதிக்கம் செய்யவும் திட்டமிட்டு வருகின்றனர்.
சீன மக்கள் வங்கி
கடந்த வாரம் ஷாங்காங் நகரத்தில் நடந்த முக்கியமான நிதியியல் கூட்டத்தில் சீன மக்கள் வங்கியின் பணச் சலவை தடுப்பு அமைப்பின் தலைவர் Gou Wenjun பேசுகையில் கிரிப்டோகரன்சி பணச் சலவை செய்ய அதிகளவில் பயன்படுத்தப்படுவது மட்டும் அல்லாமல் போதை மருந்து கடத்தல், சூதாட்டம், தீவிரத்தைத் தூண்டுதல், வரி ஏய்ப்பு செய்யவும் ஆதரிக்கவும் தூண்டுகிறது எனப் பேசியுள்ளார்.
கிரிப்டோ தடை உத்தரவு
சீனா அரசின் கிரிப்டோ தடை உத்தரவு மிகவும் கடுமையாக இருந்த காரணத்தால் கிரிப்டோ சந்தை பெரியளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் கிரிப்டோ சந்தை சீன பொருளாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கடுமையான அபராதம், தண்டனைகள் உடன் சீனா தடை உத்தரவு விதித்தது.
மெட்டாவெர்ஸ் மற்றும் NFT
ஆனால் தற்போது சீனாவுக்குக் கிரிப்டோ-வை போலவே மெட்டாவெர்ஸ் மற்றும் NFT பெரிய அளவிலான பிரச்சனையாக வெடித்துள்ளது. இதுகுறித்து Gou Wenjun பேசுகையில் சீனாவில் மெட்டாவெர்ஸ் மற்றும் NFT முறைப்படுத்த ஏற்கனவே நாட்டின் 50 மாகாணங்களில் விதிமுறை வகுக்கப்பட்டு உள்ளது.
ஒழுங்குமுறை கட்டமைப்பு
மெட்டாவெர்ஸ் மற்றும் NFT-க்கு உரிமம் பெறுவதில் இருந்து, அதன் உரிமையாளர், முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் பெயர் மற்றும் பதிவு விபரங்கள் எனப் பல தரவுகளைச் சீன அரசு சேகரிக்கத் துவங்கியுள்ளது. இதன் மூலம் விரைவில் நாடு முழுவதும் ஒழுங்கு முறைப்படுத்தப்படும்.
இந்தியாவின் நிலை என்ன..?
அமெரிக்கா-விற்கு முன்பாகச் சீனா மெட்டாவெர்ஸ் மற்றும் NFT பிரிவில் மிகப்பெரிய வர்த்தகத்தையும் வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியா இன்னமும் கிரிப்டோகரன்சி குறித்தே முடிவு எடுக்க முடியாமல் உள்ளது. எப்போது மெட்டாவெர்ஸ் மற்றும் NFT குறித்து ஆலோசனை செய்யும் எனத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications