சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அலிபாபா தனது புதிய செயற்கை நுண்ணறிவு மாடலான 'க்வென் 2.5' ஐ அறிமுகம் செய்துள்ளது. இப்போ தான் டீப்சீக் என்ற ஒரு புயல் ஏஐ துறையை புரட்டிப்போட்டது, இதை தொடர்ந்து தற்போது அடுத்த புயலாக Qwen 2.5 வந்துள்ளது.
ஏஐ துறையில் ஏற்கனவே அலிபாபா இருந்தாலும் இந்த புதிய பதிப்பு அதாவது Qwen 2.5 கொஞ்சம் ஸ்பெஷல், சீன ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக் அறிமுகம் செய்துள்ளத உயர் செயல்திறன் கொண்ட டீப்சீக்-வி3 மாடலை விஞ்சும் அளவுக்கு Qwen 2.5 இருப்பதாக அலிபாபா கூறுகிறது.

சீனாவின் புத்தாண்டு பண்டிகை நேரத்தில் இந்த அறிவிப்பை அலிபாபா தனது அதிகாரப்பூர்வ வீசாட் கணக்கில் தெரிவித்துள்ளது.டீப்சீக்கின் சமீபத்திய வெற்றி ஏஐ துறையில் இருக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் அலிபாபா போன்ற உள்ளூர் நிறுவனங்களுக்கும் கணிசமான அழுத்தத்தை கொடுத்துள்ளது. இதன் விளைவாகவே டீப்சீக் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில நாட்களில் அலிபாபா ஏஐ துறையில் தனது ஆதிக்கத்தை காட்டுவதற்காக Qwen 2.5 அறிமுகம் செய்துள்ளது.
அலிபாபா கிளவுட் பிரிவு, தனது அதிகாரப்பூர்வ வீச்சாட் கணக்கில் க்வென் 2.5-மேக்ஸ் அறிமுகத்தை தெரிவித்துள்ளது. இந்த புதிய ஏஐ மாடல் GPT-4o, டீப்சீக்-வி3 மற்றும் லாமா-3.1-405பி ஆகியவற்றை காட்டிலும் செயல்திறன் அடிப்படையில் சிறப்பாக இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஒப்பீட்டில் அலிபாபா, சமீபத்தில் வெளியான டீப்சிக்-ன் ஆர்1 மாடலை வைத்து ஒப்பிடாமல் வி3 மாடலை ஒப்பிட்டுள்ளது. இதனால் Qwen 2.5 MAX மாடலின் உண்மையான செயல்திறன் குறித்து டெக் வல்லுனர்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. இதனால் அமெரிக்க வர்த்தகத்தில் என்விடியா பங்குகளும் பெரிய அளவில் சரியாமல் தப்பித்துக்கொண்டது.
ஏற்கனவே டீப்சீக் கிளம்பிய புயல் அடங்காத நிலையில் தற்போது அலிபாபாவின் புயல் உருவாகியுள்ளது, இதில் அமெரிக்க டெக் நிறுவனங்கள் மீண்டும் அடிவாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவின் ஏஐ சேவைகள் அனைத்தும் மலிவு விலையில் இயங்க கூடியதாகவும், சேவை அளிக்க கூடியதாகவும் இருக்கும் வேளையில் ஏஐ துறையில் பெரும் போட்டி உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications