அதானி பங்குகள் அனைத்தும் சரிவு.. The Ken வெளியிட்ட அறிக்கை.. முதலீட்டாளர்கள் புலம்பல்..!

இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் அனைத்து 10 நிறுவனங்களும் சரிவில் இருக்கும் வேளையில், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய நான்கு பங்குகளும் 5% லோயர் சர்க்யூட்டில் உள்ளது.

அமெரிக்க, ஐரோப்பிய வங்கி பிரச்சனைகளின் தாக்கம் சந்தையில் இன்னும் இருந்தாலும், இன்று காலை வர்த்தகம் உயர்வுடனே துவங்கியது. இதற்கிடையில் சென்செக்ஸ் குறியீடு மதிய வர்த்தகத்தில் 50 புள்ளிகள் சரிவில் இருக்கும் நிலையில் அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களும் சரிவில் உள்ளது.

செவ்வாயன்று வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 7.8% வரையில் சரிந்து, இன்றைய வர்த்தகத்தில் குறைந்தபட்ச விலை அளவான 1,588.80 ரூபாயை எட்டியது. அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமாக இருக்கும் அதானி போர்ட்ஸ் பங்குகள் 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது.

அதானி குழும பங்குகளின் இன்றைய சரிவுக்கு என்ன காரணம்..?

அதானி பங்குகள்

அதானி பங்குகள்

அதானி பங்குகள் இன்று அதிகளவில் விற்பனையாகி 10 பங்குகளும் சரிய முக்கியமான காரணம் The Ken பத்திரிக்கை அதானி குழுமம் உண்மையிலேயே 2.15 பில்லியன் டாலர் அளவிலான கடனை செலுத்தியுள்ளதா என்று கேள்வி எழுப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

பெரும் சரிவு

பெரும் சரிவு

இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி பங்குகள் அதிகளவில் விற்பனையாகி இன்று அனைத்து பங்குகளும் சரிந்து முதலீட்டாளர்களுக்கும் அதானி குழுமத்திற்கும் சந்தை மதிப்பில் பெரும் சரிவு உருவாகியுள்ளது.

 2.15 பில்லியன் டாலர் கடன்

2.15 பில்லியன் டாலர் கடன்

அதானி குழுமம், பங்குகள் அடிப்படையிலான கடனுக்கு சுமார் 2.15 பில்லியன் டாலர் தொகையை திருப்பி செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் வங்கிகள் இதற்கு இணையாக பங்குகளை ரிலீஸ் செய்யவில்லை, இதன் மூலம் கடனை குறிப்பிட்ட 2.15 பில்லியன் மதிப்பிற்கு செலுத்தவில்லை என The Ken அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்

அதானி குழுமம், பங்குகள் அடிப்படையிலான கடனுக்கு முழுமையான தொகையை செலுத்தவில்லை, பகுதி அளவிலான தொகையை மட்டுமே செலுத்தி கூடுதல் பங்குளை பிணையமாக வைப்பதை தவிர்த்துள்ளது. இதன் மூலம் கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்துள்ளது.

அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட்

அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட்

இதேவேளையில் நேற்று அதானி குழுமம், அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை கைப்பற்ற வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் கூடுதல் அவகாசம் கோரி வருவதாக தகவல் வெளியானது. அதானி குழுமம் 2.15 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை திரும்பி செலுத்தியதை நம்பி தான் GQG பார்ட்னர்ஸ் 15000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை செய்தது.

அதானி குழுமத்தின் இன்றைய நிலை

அதானி குழுமத்தின் இன்றைய நிலை

அதானி எண்டர்பிரைசஸ் - 8.22 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 6.53 சதவீதம் சரிவு
அதானி பவர் - 5.00 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 5.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 5.00 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 5.00 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 4.99 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 4.84 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 3.58 சதவீத சரிவு
NDTV - 4.77 சதவீதம் உயர்வு

30 நாள் பர்பாமென்ஸ்

30 நாள் பர்பாமென்ஸ்

அதானி எண்டர்பிரைசஸ் - 15.96 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 0.75 சதவீதம் சரிவு
அதானி பவர் - 18.71 சதவீதம் உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் - 58.08 சதவீதம் உயர்வு
அதானி கிரீன் எனர்ஜி - 92.67 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 33.85 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 1.91 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 7.45 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 4.22 சதவீத உயர்வு
NDTV - 8.15 சதவீதம் சரிவு

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+