இந்தியாவில் பல சிறிய வங்கிகளைப் பெரும் வங்கிகளுடன் இணைக்கப்பட்டது மூலம் பல வங்கிகள் நடைமுறையில் இருந்து நீங்கியது. ஆனால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவையில் எவ்விதமான பாதிப்பு இல்லாமல் அனைத்து சேவைகளும் இணைக்கப்பட்ட வங்கிகளில் இருந்து அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் வங்கி பரிமாற்ற சேவையில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
சிண்டிகேட் வங்கி - கனரா வங்கி
மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கி முடிவுகளின் வாயிலாகச் சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் ஜூலை 1ஆம் தேதி முதல் சிண்டிகேட் வங்கியின் IFSC கோடுகள் இயங்காது எனக் கனரா வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 1 முதல் இயங்காது
இந்நிலையில் கனரா வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் 30ஆம் தேதி வரையில் அனைத்துச் சிண்டிகேட் வாடிக்கையாளர்களுக்கும் தங்களது வங்கி கணக்கின் IFSC கோடு புதுப்பித்துக்கொள்ள அவகாசம் அளிக்கப்படுகிறது. ஜூலை 1ஆம் தேதி SYNB எனத் துவங்கும் அனைத்து IFSC கோடுகளும் முடக்கப்பட்டும் என அறிவித்துள்ளது.
பணப் பரிமாற்றத்தில் பிரச்சனை
சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது கனரா வங்கியில் இணைக்கப்பட்டு உள்ள காரணத்தால் அவர்களது பழைய IFSC கோடு பயன்படுத்தி ஜூலை 1ஆம் தேதிக்குப் பின் பணத்தைத் தங்களது வங்கி கணக்கில் பெற முடியாது. அப்படி யாரேனும் இண்டர்நெட் பேங்கிங் வாயிலாக அனுப்பினாலும் பணத்தைப் பெற முடியாது.
கனரா வங்கியின் IFSC கோடு
எனவே சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் கனரா வங்கியின் புதிய IFSC கோடு-ஐ பெற வேண்டும். இதன் மூலம் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் SYNB எனத் துவங்கும் அனைத்து IFSC கோடு-க்கு மாற்றாக CNRB எனத் துவங்கும் ஐஎப்எஸ்சி கோடு-ஐ பெறுவார்கள்.
பாங்க் ஆப் பரோடா மற்றும் இந்தியன் வங்கி
பிப்ரவரி மாதம் இதேபோல் இந்திய வங்கியுடன் இணைக்கப்பட்ட அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்களின் பழைய IFSC கோடுகள் முடக்கப்பட்டது. பாங்க் ஆப் பரோடா உடன் இணைக்கப்பட்ட விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றின் IFSC குறியீடுகள் விரைவில் ரத்து செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications