புஷ்பா 2 படத்திற்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து ஆதரவு.. அல்லு அர்ஜுன் காட்டில் மழை தான்..!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா: தி ரூல்’ திரைப்படம், இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத தயாராக உள்ளது. இந்த படம் குறித்து ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பேசுவதை தாண்டி முதலீட்டு நிறுவனங்களும், கார்ப்ரேட் நிறுவனங்களும் அதிகளவில் பேச துவங்கியுள்ளனர். இப்படி யாரெல்லாம் என்ன பேசியிருக்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கப்போகிறோம்.

புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என்றும், இந்தி வெர்ஷன் மட்டும் ரூ.500 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு மொழி சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், அதன் முந்தைய பாகமான 'புஷ்பா: தி ரைஸ்’ மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது 'புஷ்பா: தி ரூல்’ படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

புஷ்பா 2 படத்திற்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து ஆதரவு.. அல்லு அர்ஜுன் காட்டில் மழை தான்..!!

டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாக உள்ளது என்பதால் டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும், டிக்கெட் புக்கிங் அளவும் அதிகரித்து Occupancy rate 40% க்கும் அதிகமாக இருக்கும் என எலாரா கேபிடல் கணித்துள்ளது.

'புஷ்பா 2’ திரைப்படத்தின் தாக்கம் திரையரங்க வசூலை மட்டும் தாண்டி பேசப்பட முக்கியமான காரணம் அதன் முதல் பாகத்தின் எதிர்பாரா வெற்றி. பிவிஆர் இனாக்ஸ் பங்குகள், இந்த படத்தால் திரையரங்குகளின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என உலகளாவிய தரகு நிறுவனம் கணித்ததை தொடர்ந்து 1.5% அதிகரித்து ரூ.1598 க்கு உயர்ந்துள்ளது.

யூபிஎஸ் நிறுவனம், இந்த படம் ரிலீசுக்கு முன்பே ரூ.150 கோடி முன்பதிவு வசூல் செய்யும் என கணித்துள்ளது, இது இந்திய திரையரங்கத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என அறிவித்துள்ளது.

மிராஜ் என்டர்டெயின்மென்ட்டின் மேலாண் இயக்குநர் அமித் சர்மா, “புஷ்பா 2 அனைத்து மொழிகளிலும் மிக அதிக வசூல் செய்த திரைப்படமாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தி பதிப்பு மட்டும் முதல் நாளில் ரூ.60-65 கோடி வசூல் செய்யும் என கணித்துள்ளார்.

திரைப்பட வணிக ஆய்வாளர்கள், அபாரமான முதல் வார இறுதியில் இப்படம் ரூ.200 கோடி வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில் அதிகப்படியான முன்பதிவுகள் மற்றும் பிரீமியம் டிக்கெட் விலைகள் இந்த வலுவான தொடக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கப்போகிறது.

பிவிஆர் இனாக்ஸ் சிஇஓ கௌதம் தத்தா, புஷ்பா 2 படத்தை “சினிமா பிரம்மாண்டம்” என்று பாராட்டியுள்ளார். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா போன்ற தென்னிந்திய சந்தைகளில், அதிகப்படியான தேவையைப் பூர்த்தி செய்ய டிக்கெட் விலைகள் 25-30% அதிகரிக்கப்பட்டுள்ளன.

எலாரா கேபிடல் நிறுவனம் புஷ்பா 2 படம், பாகுபலி 2: தி கன்‌க்ளூஷன் மற்றும் கேஜிஎஃப்: சாப்டர் 2 ஆகிய படங்கள் நிர்ணயித்த வசூல் சாதனைகளை முறியடிக்கும் திறன் கொண்டது என்று நம்புகிறது. இரண்டு படங்களும் இந்தியாவில் ரூ.1000 கோடியைத் தாண்டின.

மூவிமேக்ஸ் சினிமாஸின் திட்டமிடல் தலைவர் அஷிஷ் பாண்டே கூறுகையில், புஷ்பா முதல் பாகம் ரூ.400 கோடி வசூல் செய்த நிலையில், புஷ்பா 2 படம் இந்தி பதிப்பு மட்டும் ரூ.600-800 கோடி வசூல் செய்யலாம் என்றும், பிற மொழி பதிப்புகள் கூடுதலாக ரூ.400-600 கோடி வசூல் செய்யலாம் என்றும் மதிப்பிடுகிறார். இது படத்திற்கு மொத்தம் ரூ.1,000-1,400 கோடி வரை வசூல் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது இறுதி கணிப்பாக உள்ளது.

இப்படி ஒரு படத்திற்காக தரகு நிறுவனம் முதல் தியேட்டர் நிறுவனங்கள் வரையில் ஆதரவு அளித்து பேசப்படும் வேளையில், டிசம்பர் 5 அதன் உண்மையான முகம் தெரிய வரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+