பாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜூன் - சமந்தா .. கோடிகளில் குவியும் வருமானம்!

ஒரு காலத்தில் இந்திய திரைப்படங்கள் என்றாலே இந்தி திரைப்படங்கள் மட்டுமே என உலக அளவில் காணப்பட்டது.

ஆனால் தற்போது தென்னிந்தியத் திரைப்படங்கள் பாலிவுட் திரைப்படங்களை விட அதிக வசூல் செய்து வருகின்றன.

குறிப்பாக தென்னிந்திய நட்சத்திரங்கள் பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களை விட அதிகமாக சம்பாதிக்கின்றனர் என்பதும், தற்போது விளம்பர வருமானத்திலும் தென்னிந்திய நட்சத்திரங்கள் அதிக வருமானம் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னிந்திய நட்சத்திரங்கள்

தென்னிந்திய நட்சத்திரங்கள்

தென்னிந்திய நட்சத்திரங்கள் விளம்பரத்திற்கு அதிக சம்பளம் பெறுவதாகவும், குறிப்பாக அல்லு அர்ஜுன், சமந்தா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் மிகப்பெரிய சம்பளத்தை விளம்பரத்திற்காக பெற்று வருவார்கள் என்றும் கூறப்படுகிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் விளம்பரங்களின் அளவு குறைந்து வருவதாகவும் அதற்கு பதிலாக தென்னிந்திய நடிகர்களை விளம்பர நிறுவனங்கள் அதிகமாக பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜூன்

தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் ஒரு விளம்பரத்துக்கு ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் வாங்குகிறார் என்றும் ஒரு சில விளம்பரங்களுக்கு ஏழு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது. இது பாலிவுட்டில் ரன்வீர் சிங் வாங்கும் விளம்பர சம்பளத்தை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரத்திற்கு சம்பளம்

விளம்பரத்திற்கு சம்பளம்

அல்கெமிஸ்ட் மார்க்கெட்டிங் & டேலண்ட் சொல்யூஷன்ஸ் எம்.டி., மனிஷ் போர்வால் இது குறித்து கூறிய போது, திரை நட்சத்திரங்கள் விளம்பரத்திற்கு எவ்வளவு கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்பது அவர்கள் எத்தனை நாட்கள் கால்ஷீட் கொடுக்கிறார்கள் என்பதையும் பொறுத்தது என்றும், அதேபோல் விளம்பரம் செய்யும் நிறுவனங்களை பொறுத்தது என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

அல்லு அர்ஜுன் பாலிவுட் நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்குகிறார் என்பது உண்மைதான் என்றும் தென்னிந்திய நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றும் அது மட்டுமின்றி அரசியல் பின்னணியும் உள்ளது என்றும் மனிஷ் போர்வால் கூறியுள்ளார்.

பிராண்ட் அம்பாசிடர்

பிராண்ட் அம்பாசிடர்

தென்னிந்தியாவின் பிரபல நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருமே விளம்பரங்களில் நடிக்கவில்லை என்றாலும் தென்னிந்தியாவில் உள்ள பல நட்சத்திரங்கள் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்றும் பல நிறுவனங்கள் தற்போது தென்னிந்திய நட்சத்திரங்களை தங்களது பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்து வருகிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா

சமந்தா

இந்த ஆண்டை பொருத்தவரை நடிகை சமந்தா மிக அதிக விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்றும் ஒரு சில நிறுவனங்களில் அவர் பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்


இதுகுறித்து Mamaearth நிறுவனத்தின் இணை நிறுவனர் கஜல் அலக் ஒரு அறிக்கையில், சமந்தா நடிக்கும் விளம்பரங்கள் தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலம் ஆவதால் அவர் விளம்பர பொருளின் இலக்கை அடைய உதவியாக உள்ளார் என்றும், அதனால் அவருக்கு அதிக சம்பளம் தர நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.,

டிரெண்ட்

டிரெண்ட்

சமந்தா, இந்த ஆண்டின் 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய வைரல் பாடலில் நடித்தது, காஃபி வித் கரனின் சீசன் 7 தோன்றி போல்டான கருத்துக்களை தெரிவித்தது ஆகியவை காரணமாக அவர் சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் இருப்பதால் அவரது விளம்பரங்களும் டிரெண்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+