2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை இந்த ஆறு மாத காலத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பல்வேறு நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். Layoffs.fyi என்ற தளம் தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் பணி நீக்கம் குறித்த செய்திகளை பின்தொடர்ந்து வருகிறது.
இந்த இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 2024ஆம் ஆண்டு தொடங்கியிலிருந்து தற்போது வரை 300க்கும் அதிகமான தொழில் நுட்ப நிறுவனங்கள் 98,834 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளன.

குறிப்பாக ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மெடா உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் இதில் அடக்கம். மே மாதத்தில் மட்டும் 39 நிறுவனங்கள் 9,742 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி இருப்பதாக இந்த தளம் தெரிவிக்கிறது.
குறிப்பாக கூகுள் நிறுவனம் கடந்த மே மாதத்தில் தங்களுடைய கோர் டீமிலிருந்து 200 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி உள்ளது. குறிப்பாக கலிபோர்னியாவில் வேலை செய்து வந்த பல்வேறு பொறியாளர்கள் தங்களது வேலைகளை இழந்து இருக்கின்றனர்.
நிறுவனத்தை மறுசீர மறுக்கட்டமைப்பு செய்வதாகவும் தங்கள் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையில் ஆறு சதவீதத்தை குறைக்க போவதாகவும் கடந்த ஆண்டு கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.இதன் ஒரு பகுதியாக ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
அடுத்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் தங்களுடைய ஐடி சேவை பிரிவிலிருந்து சுமார் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக கிளவுட் மென்பொருட்கள் மற்றும் சர்வர்களை வாடகைக்கு விடுவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. அது மட்டும் இன்றி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனத்தின் கேமிங் பிரிவிலிருந்து சுமார் 1900 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை வழங்கக்கூடிய இன்டீட் இணையதளமும் தங்களது ஊழியர்களில் சுமார் 8 சதவீதம் பேரை லே ஆஃப் செய்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறையில் பணியாற்றி வந்தவர்கள்.அடுத்ததாக ஜப்பானில் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான தோஷிபா சுமார் 4000 பேரை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை பேடிஎம் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்திலேயே சுமார் 3500 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் ஜூன் மாதத்திலும் இந்த நிறுவனம் பெருமளவிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஆனால் சரியான எண்ணிக்கை விவரங்களை வெளியிடவில்லை.
புகழ்பெற்ற ஸ்டார்ட்டப் நிறுவனமான ரேஷ்மண்டி தங்களுடைய ஊழியர்களில் சுமார் 80 சதவீதம் பேரை வேலையை விட்டு நீக்கியது. டெலிவரி நிறுவனங்களான ஈபே, பிளிப்கார்ட் மற்றும் ஸ்விக்கி ஆகியவையும் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications