நீங்கள் ஏதாவது சுயதொழில் செய்து நல்ல லாபம் பெற விரும்புகிறீர்களா, இதோ உங்களுக்கான பொன்னான வாய்ப்பு. காஸ்மடிக் மற்றும் ஹெல்த் செக்மெண்டில் அதற்கான வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. கற்றாழை ஜெல்லுக்கு இப்போது நல்ல வரவேற்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
கற்றாழை ஜெல்லுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு காரணமாக அந்த ஜெல்லை வைத்து சொகுசான நைட் கிரீமிலிருந்து புத்துணர்ச்சி தரும் சோப்கள் வரை தயாரிக்கப்படுகின்றன. கற்றாழைக்கு நோயைத் தீர்க்கும் மருத்துவக் குணங்களும் உண்டு.

கற்றாழை அழகுசாதனத் தொழிலில் மட்டுமல்லாமல் உணவு மற்றும் மருத்துவத் துறையிலும் நிரம்பியுள்ளது. கற்றாழை ஜெல் அதன் தண்டுகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதன் பயன்பாடு பொதுமக்களிடையே மட்டுமல்லாமல் தொழில்துறையிலும் உருவாகியுள்ளது.
காதி மற்றும் கிராமியத் தொழில் ஆணையத் திட்டக் குறிப்பின்படி கற்றாழை ஜெல் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு கீழ்கண்டபடி செலவு உள்ளது.
நிலம்- வாடகை அல்லது சொந்தம்
கட்டடம்- ஷெட் 500 சதுர அடி- ரூ.2 லட்சம்
ஆலை மற்றும் உபகரணங்கள்- ரூ.18 லட்சம்
உற்பத்திக்கான மூலதனம் ரூ.3.33 லட்சம்
மொத்தம்- ரூ.24.83 லட்சம்
கற்றாழை ஜெல் உற்பத்திக்கான மூலதன அடிப்படை
சுய முதலீடு- ரூ.2.48 லட்சம்
பைனான்ஸ் மூலம் உற்பத்தி மூலதனம்- ரூ.3 லட்சம்
டெர்ம் லோன்- ரூ.19.35 லட்சம்
மொத்தம்- ரூ.24.83 லட்சம்
காதி ஆணைய. குறிப்பின்படி நீங்கள் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டில் முறையே ரூ.66.38 லட்சம், ரூ.77.87 லட்சம், ரூ.88.97 லட்சம், ரூ.1.06 கோடி, ரூ.1.12 கோடி வருவாயைப் பெறலாம்.
இதில் நிகர லாபமாக முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டில் ரூ.5.26 லட்சம், ரூ.7.36 லட்சம், ரூ.10.13 லட்சம், ரூ.13.53 லட்சம் மற்றும் ரூ.17.41 லட்சத்தைப் பெறலாம்.
கான்பூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி பேராசிரியை தனது கல்லூரி வேலையை விட்டுவிட்டு கற்றாழை ஜெல் உற்பத்தி தொழிலை தொடங்கினார். குறுகிய ஆண்டிலேயே இப்போது அவர் கோடிக்கணக்கில் லாபத்தை சம்பாதித்து வருகிறார்.
படித்து முடித்த இளைஞர்கள் தாராளமாக இந்தத் தொழிலில் ஈடுபடலாம். அரசுப் பணிகளுக்குக் காத்திராமல் நானே ராஜா என்பது போல சுயமாக சம்பாதித்து வாழ்க்கையில் தங்களுக்குத் தேவையானவற்றை பெறலாம்.
பார்மஸி நிறுவனங்களுக்கு இப்போது அதிக அளவில் கற்றாழை ஜெல் தேவைப்படுகிறது. இதனால் உற்பத்தியான ஜெல்லை எளிதில் விற்று லாபத்தைப் பெற்று விடலாம். இந்தத் தொழிலுக்கு அதிக மார்க்கெட்டிங் செலவுகள் இருக்காது.


Click it and Unblock the Notifications