கொரோனா தொற்று உலக நாடுகளை எந்த அளவிற்குப் பாதித்தோ அதே அளவிற்கு பல நிறுவனங்களின் வர்த்தகத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
அந்த வகையில் கொரோனா தொற்று அதிகம் இருந்த 2020-2021ஆம் ஆண்டுக் காலத்தில் அதிக வருமானம் மற்றும் லாபத்தைப் பெற்ற நிறுவனங்களின் தலைவர்களுக்குப் போனஸ் தொகை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது.
போனஸ் தொகை
ஆனால் ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவும் தமிழருமான சுந்தர் பிச்சை-யின் போனஸ் சரிந்துள்ளது. இந்நிலையில் 2021ஆம் ஆண்டில் அதிகப்படியான போனஸ் தொகை பெற்ற முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் யார் யார் தெரியுமா..? பொதுவாகப் பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் போனஸ் பிரிவில் தான் அதிக வருமானத்தைப் பெறுவார்கள்.
டெக் நிறுவனங்கள்
மேலும் டாப் 10 டெக் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் 2020ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டில் சாராசரியாக 400 சதவீதம் அதிகப் போனஸ் தொகையைப் பெற்றுள்ளனர் என்பது தான் மிகவும் முக்கியமான விஷயமாக விளங்குகிறது. இதில் அதிகம் போனஸ் தொகையை வாங்கியது யார் தெரியுமா..?
டான் ஹாக் எங் - பிராட்காம்
ஃபின்போல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் படி பிராட்காம் நிறுவனத்தின் சிஇஓ-வான டான் ஹாக் எங் 2020ல் $3.6 மில்லியன் டாலர் பெற்ற நிலையில் 2021ல் 1,586 சதவீத உயர்வில் 60.7 மில்லியன் டாலர் அளவு உயர்ந்துள்ளது.
சஃப்ரா அடா கேட்ஸ் - ஆரக்கிள்
ஆரக்கிள் நிறுவனத்தின் சிஇஓவான சஃப்ரா அடா கேட்ஸ் இப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார், இவர் சுமார் 2021ஆம் ஆண்டில் 999 சதவீதம் அதிகப் போனஸ் தொகையைப் பெற்றுள்ளார்.
பாட் கெல்சிங்கர் - இன்டெல்
பாட் 2021ஆம் ஆண்டுக்கு 713.64 சதவீதம் போனஸ் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் அவரது வருமானம் 22 மில்லியன் டாலரில் இருந்து 179 மில்லியன் டாலராக உயர்த்துள்ளது.
டிம் குக் - ஆப்பிள்
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி 571.63 சதவீத அதிகப் போனஸ் தொகையைப் பெற்றுள்ளார். இதன் மூலம் டிம் குக்கின் வருமானம் 14.7 மில்லியன் டாலரில் இருந்து 98.7 மில்லியனாக டாலராக உயர்ந்துள்ளது.
ஆண்டி ஜாஸ்ஸி - அமேசான்
அமேசான் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வான ஆண்டி ஜாஸ்ஸி 2021ஆம் ஆண்டுக்கு 491.9 சதவீதம் அதிகப் போனஸ் தொகையைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இவரது மொத்த வருமானம் 211.9 மில்லியன் டாலராக உயர்ந்தது.
பிற தலைவர்கள்
இதேபோல் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங் 52.17 சதவீதம், மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் 5.93 சதவீத போனஸ் பெற்றுள்ளனர்.
சுந்தர் பிச்சை
ஆனால் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ் போனஸ் 19.68 சதவீதம் சரிந்துள்ளது. இதேபோல் ஆல்பபெட், கூகுள் நிறுவனத்தின் சிஇஓவும் தமிழருமான சுந்தர் பிச்சை 2021ஆம் ஆண்டில் 14 சதவீதம் குறைவான போனஸ் தொகையைப் பெற்றுள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications