சென்னையில் குவியும் GCC-கள்.. தமிழ்நாட்டிற்கு வந்த மாபெரும் நிறுவனம்.. தரமான சம்பவம்..!

சென்னை: வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் வந்து தங்களது கிளை அலுவலகங்களை அமைப்பதை குளோபல் கெப்பாபிலிட்டி சென்டர் (GCC) அல்லது Captives எனக் கூறுவோம்.

அந்த வகையில் தற்போது Altair நிறுவனம் GCC இல் இணைந்துள்ளது. இது அதன் கிளை நிறுவனத்தை சென்னையில் அமைக்க முடிவு செய்துள்ளது.

சென்னையில் குவியும் GCC-கள்.. தமிழ்நாட்டிற்கு வந்த மாபெரும் நிறுவனம்.. தரமான சம்பவம்..!

நாஸ்காம் ஆய்வறிக்கையில், 2026 முதல் 2027 வரையிலான காலகட்டத்தில் 2000 GCC கள் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது. இந்த GCC கள் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் தங்களது அலுவலகங்களை தொடங்குகின்றனர். வாடிக்கையாளர் சேவை, தொழில் மேம்பாடு போன்றவை இதில் அடங்கும்.

உலக அளவில் கம்ப்யூட்டர் இன்டெலிஜென்ஸ், ப்ராடக்ட் டெவலப்மெண்ட், ஹை பெர்ஃபோர்மன்ஸ் கம்ப்யூட்டிங் போன்றவற்றில் முன்னணி நிறுவனமான Altair, தனது புதிய அலுவலகத்தை சென்னையில் திறந்துள்ளது. இந்த முயற்சியானது Altair இன் வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு கவனம் செலுத்துவதை, இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளதை உறுதி செய்கிறது. மேலும் இது இன்ஜினியரிங் துறையில் வளர்ச்சியை அதிகரிக்க இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் புதிதாக விரிவு படுத்தப்பட்டுள்ள சென்னை அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்ய உள்ளனர், மற்றும் Altair இன் இன்ஜினியரிங் & டெக்னாலஜி குழுக்களுக்கு, இந்த புதிய அலுவலகம் மையமாக செயல்படும். இந்தியாவின் தென்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் இந்நிறுவனத்தின் கூட்டாளிகளுக்கு சிறந்த சேவைகளை Altair வழங்க இருக்கிறது.

மேலும் நிறுவனத்தின் தயாரிப்புகளை மேம்படுத்த மற்றும் தொழில்நுட்ப சேவைகளை அதிகரிக்க உதவும் வகையில் பயிற்சி மற்றும் ஆலோசனை உள்ளிட்டவைகள் இந்த அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.

Altair India நிறுவனத்தின் எம்டி யான விஸ்வநாத்ராவ், இந்தியா முழுவதும் உள்ள எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு எங்களின் ஆதரவை வழங்குவதாக இருக்கிறோம். எங்களின் சேவையை செய்வதற்கு சென்னை ஒரு சிறந்த இடமாக நாங்கள் நினைக்கிறோம். மேலும் இதன் மூலம் அளிக்கும் வாய்ப்புகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறியுள்ளார்.

சென்னை அலுவலக விரிவாக்கம், Altair இன் பரந்த வளர்ச்சியைக் குறிக்கிறது. இது முக்கிய சந்தைகளில் அதன் தடத்தை பதிப்பதையும், அதன் நிலையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவிற்கு GCC கள் வர காரணம் என்ன?:இந்தியாவில் திறமையான அதிக ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களை பயன்படுத்தி இந்நிறுவனங்கள் சேவையை மேம்படுத்த முடியும். இதை விட மிக முக்கியமான ஒன்று இந்தியாவில் அலுவலகம் அமைப்பது முதல் சம்பளம் வரை அனைத்தும் வெளிநாடுகளை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.

இதன் காரணமாக GCCகள் வரத்து அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதன் ஒரு காரணமாக சென்னையில் அதிக அலுவலகங்கள் ஒத்திகைக்கு மற்றும் வாடகைக்கு 2024 ஆம் ஆண்டில் விடப்பட்டுள்ளன. ஜிசிசிகளின் செயல்பாட்டிற்கான நம்பகமான மற்றும் விருப்பமான இடமாக சென்னை இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

GCC கள் அதிகரிக்கும் போது உலகளாவிய பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வல்லுனர்கள், அறிஞர்கள், மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. மேலும் இது உலகளாவிய குடியுரிமைக் கருத்தை ஊக்குவிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+