மிஸ்டர் அம்பானி.. உங்க ஒரு மாத சம்பளம் என்ன..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணம் பணத்தோடு தான் சேரும் என்பார்கள். அதேபோலத் தான் கோடீஸ்வரர்கள் மேலும் கோடீஸ்வரர் ஆகிக் கொண்டே செல்கிறார்கள். ஏழைகள் மேலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

 

இதனை கடந்த கொரோனா காலத்திலேயே காண முடிந்தது. சாமானிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து, அடிப்படை தேவைகளுக்கே கூட கஷ்டப்பட்டனர்.

ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க!

ஆனால் இந்த காலகட்டத்திலும் பில்லியனர்கள் சொத்து பெரும் ஏற்றம் கண்டதாக கடந்த ஆண்டே ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியது.

பணக்காரர்கள் டூ கோடீஸ்வரர்கள்

பணக்காரர்கள் டூ கோடீஸ்வரர்கள்

பில்லியனர்கள் பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் பில்லியனர்களாகவே வாழ்கின்றனர். அவர்களின் வீடு, பயன்படுத்தும் கார்கள், என எல்லாமோ சொகுசாக இருக்கும். ஆனால் நாமோ பழைய வண்டியினை டயரை கூட மாற்ற முடியாமல் பேருந்தில் செல்ல வேண்டிய நிலை. இந்த ஏற்றத்தாழ்வுகள் குறையவே குறையாதா? எப்படி பணக்காரர்கள் மட்டும் சம்பாதிக்கிறார்கள். எப்போது என என்றேனும் யோசித்திருக்கிறீர்களா?

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

சில பில்லியனர்களின் மாதாந்திர வருமானம் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

நாம் முதலில் பார்க்கவிருப்பது மார்க் ஜுக்கர்பெர்க். பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான இவரின் சம்பளம் 1 டாலராகும். எனினும் பன்முகப்படுத்தப்பட்ட பங்குகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவரின் ஒரு மாத வருமான, 74.6 பில்லியன் டாலராகும். இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 55,000 கோடிகளுக்கு மேல்.

 

வாரன் பஃபெட்
 

வாரன் பஃபெட்

பங்கு சந்தையின் தந்தை என்று உலகம் முழுக்க அறியப்படும் வாரன் பஃபெட், பங்கு சந்தை முதலீட்டில் பிரபலமானவர். முதலீட்டாளர் என்பதோடு மட்டும் அல்ல, சிறந்த தொழிலதிபர். பல புத்தகங்களை எழுதியவர். இப்படி பன்முகத்தன்மை கொண்ட இவரின் மாத வருமானம் சுமார் 3000 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜெஃப் பெசோஸ்

ஜெஃப் பெசோஸ்

சர்வதேச ஈ-காமர்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெசோஸ், அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிராவர். ஊடக உரிமையாளர் ஆவார். அதோடு சர்வதேச அளவில் முதலீடு செய்யும் மிகப்பெரிய முதலீட்டாளர் ஆவார். ஜெப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் மற்றும் ஒரு விண்வெளி நிறுவனம் மற்றும் வாஷிங்டன் போஸ்டினையும் வைத்துள்ளார். இவரின் மாத வருமான 6.54 பில்லியன் டாராகும். இந்திய மதிப்பில் சுமார் 50,000 கோடி ரூபாயாகும்.

பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸ், மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். எம்.எஸ்-வின்டோஸ் என்னும் இயங்குதள அமைப்பானது இந்த நிறுவனத்தின் மிக வெற்றிகரமான மென்பொருளாகும். மைக்ரோசாப்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது இந்த எம்.எஸ்-வின்டோஸ் தான். எம்.எஸ்.வேர்டு, எக்செல், எம்.எஸ்ஆபீஸ் போன்ற பிரபல மென்பொருட்களையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்து வழங்கியது. உலக அளவில் பரவலாக பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் இவை இடம் பெறுகிறது. இவரின் மாத வருமான 330 மில்லியன் டாலராகும். இந்திய மதிப்பில் சுமார் 2500 கோடி ரூபாய்க்கு மேல்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

உலக புகழ் பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ஆவார். டெக் பில்லியனரான இவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினையும் நடத்தி வருகின்றார். தொழிலதிபர், சிறந்த முதலீட்டாளரான இவர், அண்மையில் ட்விட்டரை வாங்கவும் ஆர்வம் தெரிவித்து, பேச்சு வார்த்தை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. இவரின் மாத வருமான 227 பில்லியன் டாலராகும். இதே இந்திய மதிப்பில் சுமார் 17,000 கோடிக்கு மேல்.

குமார் மங்கலம் பிர்லா

குமார் மங்கலம் பிர்லா

இந்தியாவின் பிரபல தொழிலதிபதிரான குமார் மங்கலம் பிர்லா, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவராவர். இவரின் நிறுவனம் தற்போது சர்வதேச அளவில் 36 நாடுகளில் தனது வணிகத்தினை செய்து வருகின்றது. இவரின் மாத வருமானம் சுமார் 250 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சைரஸ் பூனவல்லா

சைரஸ் பூனவல்லா

இந்தியாவின் மருத்துவ துறையின் முன்னணி தொழிலதிபதிரான சைரஸ் பூன்வல்லா , சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவராவர். கொரோனாவின் வருகைக்கு பிறகு இவரின் வருவாய் விகிதம் இன்னும் கணிசமாக உயர்ந்துள்ளது எனலாம். இவரின் மாத வருமானம் சுமார் 2000 கோடி ரூபாய்க்கு மேல்.

 கெளதம்  அதானி

கெளதம் அதானி

இந்தியாவின் வளர்ந்து வரும் மிகப்பெரிய தொழிலதிபரான கெளதம் அதானி, பல்வேறு வணிகங்களை செய்து வருகின்றார். இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஓருவரான அதானி, அதானி குழுமத்தின் தலைவராவர். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் ரியல் டைம் பில்லியனர் பட்டியலின் படி, 5வது மிகப்பெரிய பில்லியனர் ஆகும். இவரின் மாத வருமானம் சுமார் 15,000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ஆசியாவின் முதல் பணக்காரரும், இந்தியாவின் சிறந்த தொழிலதிபரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராவர். தற்போது தனது வணிகத்தினை தனது வாரிசுகள் கைக்கு மாற்ற தொடங்கியுள்ள நிலையில் முகேஷ் அம்பானியின் மாத வருமான சுமார் 4000 கோடி ரூபாய் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amabani to mark zukerberg: how much do top 9 billionaries earning in a month?

Amabani to mark zukerberg: how much do these 9 billionaries earn in a moth?/மிஸ்டர் அம்பானி.. உங்க ஒரு மாத சம்பளம் என்ன..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X