ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹெட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் ஆகிய நவீன சாதனங்களை அறிமுகம் செய்து விற்பனை செய்து கொண்டிருந்தன. பிராண்டட் என்பதால் இந்த கருவிகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.
சாதாரண மக்களால் இது போன்ற கருவிகளை வாங்க முடியாத நிலை இருந்த போது, அதே தரத்தில் நியாயமான விலையில் ஆடியோ கருவிகளை விற்பனை செய்தது மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தது boAt. இந்த வெற்றியின் பின்னணியில் இருக்கும் அமன் குப்தாவின் கதை தான் இது.

யார் இந்த அமன் குப்தா?: அமன் குப்தா சாதாரண குடும்பத்தில் பிறந்து டெல்லி பல்கலைகழகத்தில் பி.காம் பயின்றவர். 2002ஆம் ஆண்டு சிஏ முடித்த அமன் குப்தா இந்தியாவில் இளம் வயதிலேயே சிஏ முடித்தவர் என்ற பெருமையை பெற்றார்.
பின்னர் சிட்டி பேங்கில் துணை மேலாளராக சேர்ந்து 2005ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு தந்தையுடன் தொழிலில் இணைந்தார். 2010ஆம் ஆண்டு இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸில் எம்பிஏ படிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதை பயன்படுத்தி கொண்டார்.
பின்னர் பல்வேறு நிறுவனங்களில் உயர் அதிகாரியாக பொறுப்பு வகித்த அவருக்கு சமீத் அசோக் மேத்தாவின் நட்பு கிடைத்தது. இருவரும் இணைந்து 2013ஆம் ஆண்டு இமேஜின் மார்க்கெட்டிங் சர்வீசஸ் என்ற boAtஇன் தாய் நிறுவனத்தை நிறுவினர். இதில் இருந்து தான் boAt உதயமானது.
சாமானியர்களும் பயன்படுத்தும் சாதனங்கள்: ஹெட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், ஸ்பீக்கர்கள் போன்றவற்றை சாமானிய மக்களும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உருவானது தான் boAt. குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த ஸ்டைலான, ட்ரெண்டான ஆடியோ சாதனங்களை உருவாக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இந்த நிறுவனத்தை நிறுவினர்.
பெரிய பெரிய பிராண்டுகளுடன் போட்டியிட வேண்டும், தரமான பொருட்களாக இருக்க வேண்டும், விலையும் நியாயமானதாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சவால்களை கடந்து இளைஞர்கள் மனதில் boAtஐ ஒரு லைஃப் ஸ்டைல் பிராண்டாக நிறுத்தினர்.
வெற்றி ஃபார்முலா என்ன தெரியுமா?: புதுமை, அர்ப்பணிப்பு மற்றும் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது. இது அமன் குப்தா boAt எனும் மிகப்பெரிய பிராண்டை மக்கள் மனதில் கொண்டு சேர்க்க உதவிய ஃபார்முலாக்கள். குறுகிய காலத்திலேயே இந்திய சந்தையில் boAt பிராண்டட் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த குறிப்பிட்ட பொருட்களுக்கான சந்தையில் boAtஇன் பங்கீடு 48% ஆகும். மாறி வரும் வாழ்க்கை முறை விருப்பங்களுக்கு ஏற்ற உயர்தர ஆடியோ சாதனங்களை வழங்கி இளைஞர்களை ஈர்ப்பது தான் இவர்களின் நோக்கம். சமூக வலைதளங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிரபலங்களை பிராண்ட் தூதர்களாக மாற்றியது ஆகியவற்றுக்கெல்லாம் பின்னணியில் இருப்பது அமன் குப்தா தான்.
அமன் குப்தா இந்தியாவின் இளம் தொழில்முனைவோர்களில் குறிப்பிடத்தகுந்த நபராக அறியப்படுகிறார். பல்வேறு ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்து புதிய தொழில்முனைவோர்களையும் உருவாக்கி வருகிறார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications