இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் தெலுங்கானாவின் முதல் ஜிகாபேக்டரி-ஐ ஆட்டோமொபைல் துறையில் முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனமான அமர ராஜா மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள திவிதிபள்ளி என்ற இடத்தில் அமைக்க உள்ளது.
இந்த மாபெரும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகளுக்கான துவக்கம் மற்றும் அடிக்கல்நாட்டு விழா சனிக்கிழமை தெலுங்கானா மாநிலத்தின் ஐடி, தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். ஜிகாபேக்டரி என்பது ஒரு பொருளின் தயாரிப்பை ஆரம்பம் முதல் கடைசி வரையில் ஒரே இடத்தில் உருவாக்குவது தான் ஜிகாபேக்டரி.

ஜிகாபேக்டரி பெயருக்கு ஏற்றார் போல் அளவில் மிகப்பெரியதாக இருக்கும். ஜிகாபேக்டரி என்ற சொல் எலான் மஸ்க்-ன் டெஸ்லா தொழிற்சாலைகள் மூலம் பிரபலமானது. டெஸ்லா அமெரிக்கா, சீனா, ஜெர்மனியில் பல தொழிற்சாலைகளை வைத்திருந்தாலும், அனைத்தும் ஜிகாபேக்டரி தான். ஒரு கார் தயாரிக்கும் பணிகளை துவங்கினால் விற்பனைக்கு அனுப்புவது வரையில் ஒரே இடத்தில் அனைத்து பணிகளும் நடக்கம்.
தெலுங்கானா-வில் அமர ராஜா நிறுவனம் உருவாக்கும் ஜிகாபேக்டரி-யில் 16 GWh அளவிலான லித்தியம் செல்கள் மற்றும் 5GWh அளவிலான பேட்டரி பேக்குகளை உற்பத்தி செய்ய உள்ளது. அமர ராஜா நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கிரீன்ஃபீல்ட் உற்பத்தி வசதிக்காக அடுத்த 10 ஆண்டுகளில் 9,500 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப் போவதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமர ராஜா நிறுவனம் உருவாக்கும் ஜிகாபேக்டரி-யில் சுமார் 4,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்க கூடும், இதேபோஸல் 4500 பேருக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேதொழிற்சாலை மூலம் மகபூப்நகர் மாவட்டத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இந்த சொழிற்சாலைக்காக அமர ராஜா பேட்டரி லிமிடெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான Amara Raja Advanced Cell Technologies உடன் தெலுங்கானா மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இப்புதிய கிளை நிறுவனம் தயாரிக்கும் லித்தியம் பேட்டரி பேக்-கள் மற்றும் சார்ஜர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு பொருத்தப்பட உள்ளது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் உற்பத்திக்கு பெயர்போன தமிழ்நாட்டில் அமர ராஜா பேட்டரி போன்ற பெரிய நிறுவனத்தை ஈர்க்க தவறிவிட்டோமா என்ற கேள்வி எழுகிறது. பல துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்பதில் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு வளர்ந்து வரும் EV துறையில் தெலுங்கானா போல் தனி மற்றும் சிறப்பு முதலீட்டை இதுவரை ஈர்க்கவில்லை.lz


Click it and Unblock the Notifications