அமராவதி :ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதை அடுத்து ஹைதராபாத் நகரம் தெலுங்கானாவிற்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் ஆந்திராவின் தலைநகரமாக அமராவதியை உருவாக்க வேண்டும் என்றும் இது இந்தியாவின் கனவு நகரமாக இருக்கும் என்றும் அப்போது ஆந்திர முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இது அவரது கனவு திட்டமாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் 2019 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்து ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தவுடன் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்ததோ அவற்றையெல்லாம் கைவிட்டார். அந்த வகையில் அமராவதியை தலைநகராக மாற்ற வேண்டும் என்ற திட்டமும் அப்படியே கைவிடப்பட்டது.
தற்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைந்திருப்பதால் அந்தத் திட்டத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. 2019க்கு முன்பு சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி வகித்த போது அமராவதி நகரை மேம்படுத்துவதற்காக 10,500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து அரசு கட்டிடங்களும், அலுவலகங்களும் கட்டுவதற்காக கூடுதலாக 10,000 - 12,000 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அமராவதி நகருக்காக அரசு 4,000 ஏக்கர் நிலங்களையும், விவசாயிகள் அனைவரும் சேர்ந்து 33,000 ஏக்கர் நிலங்களையும் வழங்கினர்.
முதல் கட்டமாக இந்த நகரம் 217 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுவதாக இருந்தது. முழுக்க முழுக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மூலம் இயங்க கூடிய நகரமாக இது இருக்கும் என்றும் சிங்கப்பூரை போல ஒரு Sustainable city ஆக அமையும் என்றும் திட்டமிடப்பட்டது.
மின்சார பேருந்துகள் , வாட்டர் டாக்ஸி மற்றும் மெட்ரோ, சைக்கிள் பாதைகள் என இந்திய நகரங்களுக்கெல்லாம் முன் உதாரணமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நகரத்தை வடிவமைக்கும் பொறுப்பு புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணரான அஃபீஸுக்கு வழங்கப்பட்டது. அவர் இந்த நகரம் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய நகரமாக இருக்கும் என்றும் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ஒரு நவீனமான நகரம் என்றால் அது அமராவதி ஆகத்தான் இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
சர்வதேச விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் விரிவான சாலைகள் என அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் வகையில் தான் அமராவதிக்கு முதலில் திட்டமிடப்பட்டது. அமராவதி புதிய ஐடி ஹப்பாகவும் மிகப்பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய நகரமாகவும் மாறும் என்றும் குறிப்பாக தண்ணீர் பிரச்சனை இல்லாத ஒரு டெக் நகரமாக இருக்கும் என்றும் முதலில் திட்டமிடப்பட்டது.
தற்போது ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடுவின் தலைமையின் கீழ் அரசு அமைந்துள்ளது. இதனை அடுத்து அமராவதி திட்ட ஆவணங்கள் தூசி தட்டப்பட்டுள்ளன. அதிகாரிகள் கள ஆய்வுகளில் கூட இறங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019ஆம் ஆண்டுக்கு முன்பு அமராவதி நகரை உருவாக்க 21,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது சந்திரபாபு நாயுடு நினைத்ததை போன்ற ஒரு கனவு நகரமாக அமராவதியை உருவாக்க வேண்டும் என்றால் 40,000 கோடி ரூபாய் தேவைப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Story Written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications