பள்ளி ப்ராஜக்ட்கள் முதல் வீட்டில் உள்ள தட்டுமுட்டுச் சாமான்களை ஒட்ட வைப்பதற்கு இந்தியர்கள் பல ஆண்டுகளாக நம்பியிருக்கும் ஒரு பசை ஃபெவிகால், கடையில் கம் வேண்டும் என கேட்பதை தாண்டி ஃபெவிகால் வேண்டும் என்பது தான் அதிகம். கிட்டத்தட்ட xerox போல.இந்திய குடும்பங்களில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கும் ஃபெவிகால் பசையை உருவாக்கியது யார் தெரியுமா..?
1959 ஆம் ஆண்டில் ஃபெவிகால் நிறுவனத்தை பல்வந்த் பாரெக் என்பவர் தொடங்கினார். முதல் தலைமுறை தொழிலதிபர் என்பதால் பல்வேறு சிரமங்களை சந்தித்தார். பல்வேறு முட்டுக்கட்டைகளைத் தாண்டி வெற்றி இலக்கை அடைந்தார் பல்வந்த் பாரெக். இன்றைக்கு அந்த நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்பைப் பெற்றுள்ளது.

மும்பையில் ஒரு ஜெயின் குடும்பத்தில் பிறந்த பல்வந்த் பாரெக் பிகேபி, பாலுபாய் எனச் செல்லமாக அழைக்கப்பட்டார். மும்பை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை பாரெக் முடித்தார். படிக்கும்போதே ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்த பாரெக் திருமணமும் செய்து கொண்டார். படித்து முடித்த பின்னர் பியூன் வேலையில் சேர்ந்தார்.
தான் வேலை பார்க்கும் மர வியாபார நிறுவன முதலாளியின் வேர்ஹவுஸில் தங்கியிருந்த போது தான் பாலு பாய்க்கு தான் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சைக்கிள்களை இறக்குமதி செய்தல், அரேகா கொட்டைகள், பேப்பர் டைகளை மேலை நாடுகளில் இருந்து கொண்டு வந்து இந்தியாவில் விற்பனை செய்தார்.
கடையைத் தொடங்கியவுடன் தனது மனைவி தம்பி சுஷிலுடன் மும்பையின் சியான் பகுதிக்கு குடிபெயர்ந்தார். அப்போது நாடு சுதந்திரம் பெறுவதற்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்ததால் சட்டக்கல்வி பயிலுவதற்கு முன்பாக பாலு பாயும் சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார்.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் மிகவும் ஆர்வமாக பாலுபாய் ஈடுபட்டார். அப்போது குடும்பத்தார் தந்த அழுத்தம் காரணமாக போராடுவதை நிறுத்திவிட்டு சட்டம் பயின்றார். ஜெர்மனியைச் சேர்ந்த Fedco என்ற நிறுவனத்துடன் 50-50 சதவீத கூட்டு சேர்ந்தார். அந்த நிறுவனத்தின் தலைவர் ஹோசெஸ்ட் அழைப்பின் பேரில் 1 மாதம் ஜெர்மனிக்கு சென்றார். ஹோசெஸ்ட் காலமான பின்னர் அந்த நிறுவனம் நேரடியாக விற்பனையில் இறங்கியது.
இந்த நிலையில் 1954 ஆம் ஆண்டில் பல்வந்தும் அவரது தம்பி சுஷிலும் சேர்ந்து மும்பையின் ஜேக்கப் சர்க்கிளில் தொழிலைத் தொடங்கினர். இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்கள், பிக்மென்ட் எமல்ஷன்ஸ், டை விற்பனை மற்றும் தயாரிப்பு தொழிலை பாரெக் டைகெம் (Parekh Dyechem Industries) என்ற பெயரில் ஆரம்பித்தனர்.
பின்னர் ஃபெட்கோ நிறுவனப் பங்குகளை இன்னும் அதிகமாக பல்வந்த் வாங்கினார். இதைத் தொடர்ந்து ஃபெவிகால் என்ற கோந்தைத் தயாரித்தார். பல்வந்த்தின் இளைய சகோதரர் நரேந்திரா பாரெக் அமெரிக்காவில் படித்துவிட்டு வந்து பல்வந்த் நிறுவனத்தில் சேர்ந்தார். 1959ஆம் ஆண்டில் தனது நிறுவனத்தை பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் (Pidilite Industries ) என்று பெயர் மாற்றம் செய்தார். அன்றிலிருந்து இதேபெயர் தொடர்கிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications