அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அமேசான் நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில், 2023 ஆம் ஆண்டுத் துவக்கத்திலேயே பொருளாதார மந்தநிலையைக் காரணம் காட்டி அமேசான் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி உலகளவில் 18000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார்.
இதற்கான அறிவிப்புகள் ஊழியர்களுக்கு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என அறிவித்தார் அமேசான் சிஇஓ.
இந்த நிலையில் இந்திய அலுவலகத்தில் கடந்த முறை பணிநீக்கத்தை 450 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், 2வது பணிநீக்க சுற்றில் குறைந்தது 1000 பேராவது பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
அமேசான்
அமேசான் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்தபடி உலகளவில் 18000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் திட்டத்தை நிர்வாகம் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக இந்தியாவிலும் 2வது பணிநீக்க சுற்று துவங்கியுள்ளதால் இந்தியாவில் டெக், மனிதவள பிரிவு எனத் துறையில் இருந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.
18000 ஊழியர்கள் பணிநீக்கம் துவக்கம்
இந்த நிலையில் லின்கிடுஇன், டிவிட்டர் தளத்தில் அமேசான் ஊழியர்கள் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகப் பலர் பதிவிடத் துவங்கியது மூலம் அமேசான் தனது 2வது சுற்றுப் பணிநீக்கத்தைத் துவங்கியது உறுதியாகியுள்ளது.
முக்கியப் பிரிவுகள்
இந்தப் பணிநீக்கத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தும் வர்த்தகப் பிரிவு, அதிக லாபம் ஈர்க்காத பிரிவுகள், வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் பிரிவுகளில் இருந்து தான் அதிகளவிலான பணிநீக்கம் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈமெயில்
தற்போது பணிநீக்கம் செய்யப்பட உள்ள ஊழியர்களுக்கு நிர்வாகம் பணிநீக்கம் குறித்து ஈமெயில் அனுப்ப துவக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த இமெயிலில் குறித்த நாளில் லீடர்ஷிப் டீம்-ஐ அணுக உத்தரவிடப்பட்டு உள்ளது.
5 மாதம் சம்பளம்
இதோடு முக்கியமாக இந்த ஈமெயிலில் பணிநீக்கம் செய்யப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் 5 மாதம் சம்பளத்தை severance pay ஆகக் கொடுப்பதாக அமேசான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிவிட்டர்
சமீபத்தில் அதிக எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்த எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் ஊழியர்கள் பலருக்கு இதுவரையில் severance pay குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை, இதேபோல் severance pay அறிவிக்கப்பட்ட பலருக்கு அவர்களது SPAM போல்டரில் இந்த ஈமெயில் சென்றுள்ளது, மேலும் severance pay தொகை மற்றும் அதன் கணக்கீட்டு முறை மிகவும் மோசமாக உள்ளதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் அமேசான் 5 மாத சம்பளத்தைக் கொடுத்துள்ளதை அமேசான் ஊழியர்கள் பாராட்டி வருகின்றனர்.
பொருளாதார மந்த நிலை
இந்தப் பொருளாதார மந்தமான காலகட்டத்தில் எப்போது எந்த நாடு ரெசிஷனை அறிவிக்கும் எனக் காத்திருக்கும் நிலையில் டெக் நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்கத்தைத் தவிர்க்க முடியாத நிலையில் இதை ஏற்றுக்கொண்டு வெளியேறினாலும் severance pay போன்ற விஷயத்தில் அதிகளவிலான எதிர்பார்ப்பு உள்ளது என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2வது சுற்று பணிநீக்க
அமேசான் 2வது சுற்றுப் பணிநீக்கத்தைத் துவங்கிய நிலையில் மற்ற நிறுவனங்களும் பணிநீக்கத்தை அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்திய ஐடி சேவை துறையிலும் அதிகச் சம்பளம் கொடுத்து ஊழியர்களைப் பணியில் அமர்த்தும்
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications