முன்னணி மின் வணிக நிறுவனமான அமேசான், இந்தியாவில் ஃபிளிப்கார்டிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்து செயல்பட்டு வருகிறது அமேசான் நிறுவனம். இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் இந்தியா உள்பட பல நாடுகளில் உள்ளது. நம் நாட்டை பொறுத்தவரை தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இதன் கிளைகள் உள்ளன. சென்னையை பொறுத்தவரை பெருங்குடியில் அமேசான் நிறுவனம் அமைந்துள்ளது.

இந்தநிலையில், கோவையில் அமேசான் நிறுவனம், அதனை விரிவாக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, தற்போது, அதன் Amazon Development Centre India Pvt Ltd மூலமாக இந்த KGISL SEZ வளாகத்தில் கூடுதல் 57,000 சதுர அடி இடத்தை கையகப்படுத்தியுள்ளது, KGISL SEZ (கேஜிஐஎஸ்எல் சிறப்பு பொருளாதார மண்டலம்) கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு முக்கிய தகவல் தொழில்நுட்ப (IT) மற்றும் வணிக செயல்பாடுகள் ஆதரவு சேவைகள் (BPO) மையமாகும். இது பல்வேறு மல்டிநேஷனல் நிறுவனங்களுக்கு வசதியான தொழில்நுட்ப சூழலை வழங்குகிறது.
இதுமட்டுமல்லாமல், இங்கு Amazon, Bosch, Cognizant, DELL, Wipro, Tata Consultancy Services (TCS) போன்ற பல முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, அமேசானின் இந்த விரிவாக்கம், கோயம்புத்தூரில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கிய IT & BPO மையமாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமேசானின் இந்த முதலீடு, உள்ளூர் திறமைகளை மேம்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.
கோயம்புத்தூர், தரமான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, திறமையான பணியாளர்கள் மற்றும் வணிகத்துக்கு உகந்த சூழல் ஆகியவற்றால் பல்வேறு உலகளாவிய ஐடி மற்றும் பிபிஓ (BPO) நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தவகையில், கடந்த 2 வருடங்களாகவே கோவையில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. அங்கே தொழில் செய்வதற்கு ஏதுவான சூழல் உருவாகிக்கொண்டு இருக்கிறது.
கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கூட கோவையில் பல்வேறு முதலீடு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில், தகவல் தொழில்நுட்பம் வாழ்வியல் அறிவியல் விண்வெளி பொறியியல் துறைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உயர் தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான தேவை அதிகரிக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications