இந்தியாவில் இ-காமர்ஸ் சேவை நிறுவனங்களில் அமேசான் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அமேசான் நிறுவனத்தில் மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் ,அழகு சாதன பொருட்கள் ,குழந்தைகளுக்கான பொம்மைகள், மருந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் நாம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடிகிறது.
அமேசானில் மார்க்கெட் பிளேஸ் கட்டணம்: அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு தகவலை தந்திருக்கிறது. இனி அமேசான் செயலி வாயிலாக நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக ஐந்து ரூபாயை செலுத்த வேண்டியிருக்கும். அமேசான் நிறுவனம் தங்கள் செயலி வாயிலாக எடுக்கப்படும் ஒவ்வொரு ஆர்டருக்கும் ஐந்து ரூபாயை மார்க்கெட் பிளேஸ் கட்டணமாக வசூல் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. அமேசானில் பிரைம் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கும் இந்த ஐந்து ரூபாய் மார்க்கெட் பிளேஸ் கட்டணம் பொருந்தும் என அமேசான் நிறுவனம் கூறியிருக்கிறது.

அனைத்து ஆர்டர்களுக்கும் பொருந்தும்:இந்தியாவில் ஏற்கனவே ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் பிளாட்பார்ம் கட்டணத்தை வசூல் செய்கின்றன. தங்களுடைய செயல்பாட்டு செலவினங்களுக்கு இந்த கட்டணம் வசூல் செய்வது மிகவும் முக்கியம் என இந்த நிறுவனங்கள் கூறி வருகின்றன. இந்த சூழலில் அமேசான் நிறுவனமும் அதே பாணியை பின்பற்றி ஐந்து ரூபாய் மார்க்கெட் பிளேஸ் கட்டணம் அனைத்து ஆர்டர்களுக்கும் வசூல் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
ரூ.5 கட்டணம் கட்டாயம்: நாம் எவ்வளவு தொகைக்கு ஆர்டரை அமேசானில் புக் செய்தாலும் கட்டாயம் அத்துடன் இறுதியில் ஐந்து ரூபாய் மார்க்கெட் பிளேஸ் கட்டணமாக சேர்த்து தான் மொத்தம் நான் செலுத்த வேண்டிய தொகை காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மார்க்கெட் பிளேஸ் கட்டணம் என்பது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் வாடிக்கையாளர்களுக்கு சீரான மற்றும் மிகச் சிறந்த ஒரு ஷாப்பிங் அனுபவத்தை தருவதற்கு இந்த கட்டணம் என்பது தேவைப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
முதலில் சோமேட்டோ , ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் தான் தங்களுடைய செயலிகள் வாயிலாக இதுபோன்ற பிளாட்பார்ம் கட்டணங்களை வசூல் செய்ய தொடங்கின. முதலில் இரண்டு ரூபாய் பிளாட்பார்ம் கட்டணம் என வசூல் செய்தோது தற்போது அதனை 11 ரூபாய் என உயர்த்திவிட்டன. இந்த கட்டணங்கள் மூலமே இந்த நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் வருகிறது.
எதற்கெல்லாம் மார்க்கெட் பிளேஸ் கட்டணமில்லை:தற்போது அமேசானும் அதே வழியை பின்பற்ற தொடங்கி இருக்கிறது. கிஃப்ட் கார்டுகள் வாங்குவது, அமேசான் பிசினஸ், பஜார் ,அமேசான் நவ் மற்றும் அமேசான் ஃபிரெஷ் ஆகியவற்றின் மூலம் எடுக்கப்படும் ஆர்டர்கள், ரீசார்ஜ் பில் பேமென்ட், டிக்கெட் புக்கிங் மற்றும் சந்தா உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் வசூல் செய்யப்படாது என அமேசான் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பிராசசிங் அல்லது எக்ஸ்சேஞ்ச் கட்டணம் செலுத்தப்பட்ட ஆர்டர்களுக்கும் இந்த 5 ரூபாய் பிளாட்பார்ம் கட்டணம் பொருந்தாது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications