ரிலையன்ஸூக்கு எதிராக களமிறங்கிய அமேசான்.. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.. பியூச்சர் குழும டீல்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ப்யூச்சர் குழுமத்தின் சில்லறை வணிக பிரிவினை வாங்குவதற்கான, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்திற்கு இந்திய போட்டி ஆணையம் சமீபத்தில் ஒப்புதல் (CCI) வழங்கியது.

ஆன்லைன் ஈ காமர்ஸ் வணிகத்தில் சமீபத்தில் இறங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க பணிகளுக்கு அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் ப்யூச்சர் குழுமத்துடன் ஒப்பந்தமும் போடப்பட்டது.

ஆனால் ப்யூச்சர் குழுமத்தின் கூட்டாளரான அமேசான் தனது கூட்டாளருக்கு எதிராக நீதிமன்றத்தினை நாடியது. இந்த வழக்கில் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நடுவர் நீதிமன்றம், தனது இடைக்கால உத்தரவில் பியூச்சர் குழு தனது சில்லறை வணிக்கத்தினை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 3.38 பில்லியன் டாலர் பங்குகளை விற்க தற்காலிகமாக தடை விதித்தது.

சூமுக தீர்வு

சூமுக தீர்வு

அமேசான் Vs பியூச்சர் குழுமம் Vs ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்கு இடையிலான வழக்கில், அமேசானுக்கு சாதகமாக இந்த தீர்ப்பினை சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கியது. இதனால் தற்காலிகமாக இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்குமாறு ப்யூச்சர் குழுமத்திடம் கூறியது. இந்த விவகாரத்தில் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு இறுதி தீர்ப்பை எட்டும் வரையில், ஒப்பந்தத்தில் ஒரு சூமுகமான தீர்வினை எட்ட முடியாது என்றும் கூறியது..

அமேசான் – பியூச்சர் குழுமம்

அமேசான் – பியூச்சர் குழுமம்

ரிலையன்ஸ் ஒப்பந்தத்திற்கு முன்பே, அமெரிக்காவின் ஈ காமர்ஸ் நிறுவனமான அமேசான், பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் 49% பங்குகளை வாங்கியிருந்தது கவனிக்கதக்கது. இதற்கிடையில் தான் கிஷோர் பியானிக்கு சொந்தமான பியூச்சர் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ரிலையன்ஸ் திட்டமிட்டிருந்தது. இது கடன் அதிகரித்ததை தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய, கடந்த ஆண்டில் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இதனையடுத்து ப்யூச்சர் குழுமத்தினை கையகப்படுத்த 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தமும் போடப்பட்டது.

ரிலையன்ஸூக்கு சாதகமான ஒப்புதல்

ரிலையன்ஸூக்கு சாதகமான ஒப்புதல்

ஆக இப்படியொரு சிக்கலான பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் இந்தியா போட்டி ஆணையம், ரிலையன்ஸூக்கு சாதகமாக ஒப்புதல் அளித்துள்ளது. ப்யூச்சர் குழுமம் மற்றும் ரிலையன்ஸ் ஒப்பந்தம் சுமூகமாக போடப்பட்டால், பியூச்சர் குழுமத்தின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடை பங்குகள் அனைத்தும், ரிலையன்ஸ் ரீடையில் மற்றும் பேஷன் லைப்ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்படலாம்.

வர்த்தகத்தினை மேம்படுத்த முடியும்

வர்த்தகத்தினை மேம்படுத்த முடியும்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிக்பஜார், எம்பிபி, ஃபுட்ஹால், ஈஸிடே, நீல்கிரி சென்ட்ரல் அன்ட் பிராண்ட் பேக்டரியை கையகப்படுத்தலாம். அதோடு சில கடன் மற்றும் பொறுப்புகளையும் ரிலையன்ஸ் எடுத்துக் கொள்ளும் என்றும் ரிலையன்ஸ் தரப்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆக இதன் மூலம் ரிலையன்ஸ் தனது சில்லறை வர்த்தகத்தினை பலப்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் தான் தற்போது மீண்டும் அமேசான் உச்ச நீதிமன்றத்தினை நாடியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon appeals to SC in future group deal dispute

Amazon Vs future group Vs reliance industries updates.. Amazon appeals to SC in future group deal dispute
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X