இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகச் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகப்படியான வர்த்தகம் மற்றும் முதலீட்டையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான பிளிப்கார்ட் 2020-21ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது, ஆனால் இதேநேரத்தில் அதிகப்படியான நஷ்டத்தையும் சந்தித்துள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனம்
அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமாக விளங்கும் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் பிளிப்கார்ட் நிறுவனம் 2020-21ஆம் நிதியாண்டுக்கான வர்த்தகத் தரவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் சுமார் 25 சதவீதம் வளர்ச்சி அடைந்து 43,357 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.
விரிவாக்கம்
ஆனால் இதே காலகட்டத்தில் பிளிப்கார்ட் சந்தையில் இருக்கும் போட்டியைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய முதலீட்டில் அதிகப்படியான விரிவாக்கத் திட்டத்தைக் கையில் எடுத்தது. இதன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த செலவுகள் 45,801 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நஷ்டம்
2020-21ஆம் நிதியாண்டு வர்த்தகத்தில் வருமானத்தை விடவும் செலவுகள் அதிகமாக இருந்த காரணத்தால் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த நஷ்டம் 2,445 கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த வருடத்தை விடவும் 25 சதவீதம் குறைவாகவும். சமீபத்தில் பிளிப்கார்ட் 2020-21ஆம் ஆண்டு செய்த முதலீட்டின் வாயிலாக B2B வர்த்தகப் பிரிவில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
அமேசான் நிறுவனம்
இந்தியாவில் பிளிப்கார்ட்-ம், அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் 2020-21ஆம் நிதியாண்டில் 16,379 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 49 சதவீதம் அதிகமாகும்.
அமேசான் வளர்ச்சி
பிளிப்கார்ட் நிறுவனத்தின் வருமானத்தை விடவும் அமேசான் வருவாய் குறைவாக இருந்தாலும் வளர்ச்சி அளவீடுகள் மிகவும் சிறப்பாகவே உள்ளது. மேலும் அமேசான் நிறுவனத்தின் நஷ்ட அளவீடு 19 சதவீதம் குறைவாக இருந்தாலும் 4,748 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
கடுமையான போட்டி
லாக்டவுன் துவங்கிய நாள் முதல் ஆன்லைன் வர்த்தகச் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பிளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் ஜியோமார்ட், டாடா பிக்பேஸ்கட் மத்தியில் கடுமையான வர்த்தகப் போட்டி உருவாகியுள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications