உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான், புதிய சிஇஓ தலைமையில் எவ்விதமான சரிவும் இல்லாமல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் பல முக்கியத் துறைகளில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது அமேசான்.காம்.
இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஆண்டி ஜாசி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த டெக் உலகையும் அதிரவைத்துள்ளார்.
அமேசான் சிஇஓ ஆண்டி ஜாசி
அமேசான் சிஇஓவாக ஆண்டி ஜாசி பொறுப்பேற்று பெரிய அளவிலான அறிவிப்புகளை இதுவரை வெளியிடாதது பலருக்கும் கேள்வியை எழுப்பியது. இந்நிலையில் சமீபத்தில் ரெயூட்டர்ஸ் பத்திரிக்கையிடம் பேசிய ஆண்டி ஜாசி அடுத்தச் சில மாதத்தில் கார்பரேட் மற்றும் டெக்னாலஜி பிரிவில் மட்டும் புதிதாகச் சுமார் 55,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
55,000 வேலைவாய்ப்புகள்
இதில் என்ன பெரிய விஷயமாக என நீங்கள் கேட்கலாம்.. ஆமாம் கூகுள் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் எண்ணிக்கை அல்லது பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை தான் இந்த 55,000 ஊழியர்கள்.
கார்பரேட் மற்றும் டெக்னாலஜி பிரிவு
டெலிவரி மற்றும் விற்பனை பிரிவில் இவ்வளவு ஊழியர்கள் சேர்க்க திட்டமிட்டு இருந்தால் பெரிய விஷயமாக இருக்காது. ஆனால் ஆன்ட் ஜேசி கார்பரேட் மற்றும் டெக்னாலஜி பிரிவில் மட்டுமே 55,000 ஊழியர்கள் பணியில் சேர்க்கத் திட்டமிட்டு உள்ளது, அமேசான் மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளதாகத் தெரிகிறது.
ஆண்டி ஜாசி திட்டம்
அமேசான் சிஇஓவாகப் பதவியேற்றிய ஆண்டி ஜாசி முதல் முறையாக வெளியிட்ட பேட்டியில், ரீடைல், கிளவுட், விளம்பரம் மற்றும் பிற வர்த்தகத் துறையில் மிகப்பெரிய அளவிலான விரிவாக்க பணிகளைச் செய்ய உள்ளோம், இதேபோல் அமேசான் நிறுவனத்தின் செயற்கைக்கோள் பிராண்ட்பேன்ட் சேவை திட்டமான குனிபர் திட்டம் விரைவாக அறிமுகம் செய்ய உள்ளோம்.
செப்டம்பர் 15 ஆரம்பம்
இதனால் அதிகளவிலான ஊழியர்கள் பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார் ஆண்டி ஜாசி. இந்த 55,000 வேலைவாய்ப்புப் பணிகள் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் இருக்கும் எனவும் செப்டம்பர் 15 முதல் இதற்கான பணிகளைத் துவங்கப்படும் எனவும் ஆண்டி ஜாசி தெரிவித்துள்ளார்.
அமேசான் இந்தியா
அமேசான் இந்தியாவில் முதல் முறையாக ஈகாமர்ஸ் மற்றும் ரீடைல் வர்த்தகத்தைத் தாண்டி வெல்த் மேனேஜ்மென்ட் துறையில் முதலீடு செய்துள்ளது. அமேசான் நிறுவனம் ஸ்மால்கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 40 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டுச் சுற்றில் முதலீடு செய்துள்ளது.
டிஜிட்டல் கடன் திட்டங்கள்
இந்த முதலீடு மூலம் அமேசான் நிறுவனம் பல்வேறு கடன் மற்றும் நிதி சேவை திட்டங்களை அளிக்க முடியும். ஏற்கனவே அமேசான் கிரெடிட் கார்டு மற்றும் Pay later சேவைகள் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications