ஒவ்வொரு மணி நேரமும் 67 கோடி ரூபாய் சம்பாதிக்கும் நபரை உங்களுக்குத் தெரியுமா? உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் என்ற உருவம் உங்கள் மனதில் தோன்றியிருந்தால், அதுதான் இல்லை. ஆண்டுதோறும் லட்சங்கள், கோடிகள் சம்பளம் வாங்குபவர்களின் கதைகள் இன்று சர்வசாதாரணமாக உள்ளன. ஆனால் ஒரு மணி நேரத்துக்கு ரூ.67 கோடி சம்பாதிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை உங்களால் மறுக்கமுடியுமா? உங்களால் இதை நம்பமுடியாவிட்டாலும் இது உண்மைதான்.
நாம் இப்போது உலகின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரரும், அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் பற்றிதான் பேசுகிறோம். ஆம், பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் பணத்திற்காக ஓடும் பல மணிநேர வேலைகளை ஜெஃப் பெசோஸ் மிகச்சுலபமாக சில நிமிடங்களுக்குள் செய்து பல கோடிகளை சம்பாதிக்கிறார். 2024 ஆம் ஆண்டில் ஜெஃப் பெசோஸ் ஒரு மணி நேரத்திற்கு $8 மில்லியன் அதாவது ரூ. 67.2 கோடி சம்பாதிக்கிறார் என்று இன்க்.காம் தெரிவித்துள்ளது.

பெசோஸின் ஆண்டு சம்பளம் வெறும் 80,000 அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் 67 லட்சம் ரூபாய் மட்டுமே. அதே சமயம் ஒரு மணி நேரத்திற்கு 62 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதன்படி அவர் ஒரு மணி நேரத்துக்குச் செய்யும் தொகை அவரது ஆண்டுச் சம்பளத்தில் 100 மடங்கு அதிகம். உலக பில்லியனர்கள் பட்டியலில் தற்போது பெசோஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். சமீப காலம் வரை எலான் மஸ்க்குக்கு பெசோஸ் கடும் போட்டியை கொடுத்து வந்தார்.
ஜெஃப் பெசோஸின் சொத்து இந்திய கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானியின் சொத்துக்களை விட பத்து மடங்கு சொத்துக்களை வைத்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, பெசோஸின் நிகர மதிப்பு $246 பில்லியன் ஆகும். அதேசமயம், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 96.7 பில்லியன் டாலராகவும், அதானியின் சொத்து மதிப்பு 82.1 பில்லியன் டாலராகவும் உள்ளது. பெசோஸ் அம்பானியை விட இரண்டு மடங்கு பணக்காரர் மற்றும் அதானியை விட மூன்று மடங்கு பணக்காரரும் ஆவார்.
ஜெஃப் ஒரு கேரேஜிலிருந்து எழுந்த உலகத்தை வென்றவர். ஜனவரி 12, 1964 இல் பிறந்த அவர், ஜூலை 5, 1994 அன்று சியாட்டில் கேரேஜில் அமேசானைத் தொடங்கினார். அமேசான் இன்று உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளராக உள்ளது. இதற்கிடையில், அவர் ஜூலை 5, 2021 அன்று அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications