மருத்துவத்துறைக்கும் வந்துட்டீங்களா? ரூ.299-க்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் அமேசான் கிளினிக்!

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளமாக செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்கள், துணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை சாமான்கள், ஸ்மார்ட் ஃபோன்கள் போன்ற எண்ணற்ற பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக அமேசான் கிளினிக்கையும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய பயனர்கள் டெலிமெடிசின் சேவையைப் பெற முடியும். அமேசான் கிளினிக் சுமார் 50-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு ஆலோசனையை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ராக்டோ போன்ற பிற ஆன்லைன் தலங்களுடன் அமேசான் கிளினிக் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.299 என்ற குறைந்த கட்டணத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெறலாம். மேலும் அமேசான் ஆப் மூலம் நேரடியாக ஆலோசனை பெற பதிவு செய்யலாம்.

 மருத்துவத்துறைக்கும் வந்துட்டீங்களா? ரூ.299-க்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் அமேசான் கிளினிக்!

ஆண்ட்ராய்டு மற்றும் iOS அப்ளிகேஷன்களில் பிரத்தியேகமாக கிடைக்கும் இந்தச் சேவையானது, டெர்மட்டாலஜி, மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் உள்ள மருத்துவர்களுடன் ஆலோசனை பெற உதவுகிறது.

மேலும் அமேசான் கிளினிக் அப்ளிகேஷனில் ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் கொண்டிருப்பதையும் அமேசான் உறுதி செய்துள்ளது. ஆலோசனை பதிவுகள் அனைத்தும் ஒரு தனி நபரின் தனி உரிமையை பாதுகாக்கும் என்றும் அமேசான் உறுதியளித்துள்ளது.

அமேசான் கிளினிக் மூலம் ஆரம்ப நிலை நோயை கண்டறிந்த பிறகு தேவைப்படும் சிகிச்சை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது இது அவசர கால சூழ்நிலைக்கு ஏற்றது அல்ல என்றும் அமேசான் தனது அறிவிப்பில் பகிர்ந்துள்ளது. அதிக அளவிலான சிகிச்சை வழங்கும் வகையில் தேசிய அளவில் அமேசான் டெலிமெடிசின் வெளியிடப்பட இருக்கிறது.

அமேசான் கிளினிக்கில் டைரக்டாக மருத்துவர்களின் அவைலபிலிட்டியை பொறுத்து ஆலோசனை பெறலாம். அப்படி இல்லை எனும் பட்சத்தில் முன்கூட்டியே பதிவு செய்து 10 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை குறிப்பிட்ட மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறலாம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் மருத்துவரைப் பொறுத்து கட்டணங்கள் ரூ.299 முதல் ரூ.799 ரூபாய் வரையில் மாறுபடும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது. கூடுதலாக எந்தக் கட்டணமும் இல்லாமல் 7 நாட்கள் வரையில் ஃபாலோ அப் நன்மைகளும் வழங்கப்படுகிறது. அமேசானின் பார்மசி ஸ்டோர் மூலம் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த புதிய சேவையின் மூலம் அமேசான் கிளினிக் இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வரும் டெலிஹெல்த் துறையில் நுழைந்துள்ளது. இது பயனர்களுக்கு வசதியான, தேவைக்கேற்ப மருத்துவ ஆலோசனையை பெற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவசர காலங்களுக்கு அமேசான் கிளினிக் மூலம் எந்தவித ஆலோசனையும் பெற முடியாது என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+