உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் இதுவரையில் எந்தொரு நிறுவனமும் செய்திடாத வகையில் 2 அறிவிப்பு மூலம் சுமார் 27000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. 2வது பணிநீக்க அறிவிப்புக்கு பின்பு அமேசான் நிர்வாகம் ஒவ்வொரு பிரிவாக ஆய்வு செய்து அதன் மூலம் லாபமும், வர்த்தகமும், வருவாயும் பெற முடியுமா என்பதை ஆய்வு செய்து பணிநீக்கம் செய்து வருகிறது.
இதனால் ஒவ்வொரு வார இறுதியிலும் அமேசான் ஊழியர்கள் பீதியிலேயே உள்ளனர். சமீபத்தில் அமேசான் நிறுவனத்தில் அதிக வருமானம் ஈட்ட முடியாத அதன் வீடியோ-கேம் பிரிவுகளில் இருந்து சுமார் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது காலாண்டு முடிவுகள் உடன் பணிநீக்க அறிவிப்புகளும் வெளியிட்டு உள்ளது அமேசான்.

அமேசான்.காம் மார்ச் காலாண்டில் சந்தை கணிப்புகளை காட்டிலும், சிறப்பான லாபம் மற்றும் வருவாய் அளவீடுகளை பெற்று இருந்தாலும் சில முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டு உள்ளது. அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சியில் ஈகாமர்ஸ் வர்த்தகத்திற்கு இணையாக மதிப்பிடப்படும் ஒன்று அதன் கிளவுட் சேவைகள் தான். சர்வதேச அளவில் அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவை போட்டிப்போடும் ஒரு பிரிவு என்றால் அது கிளவுட் சேவை தான்.
இந்த நிலையில் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது அமேசான் தலைமை நிதியியல் அதிகாரி ப்ரையன், அமேசான் கிளவுட் சேவை வாடிக்கையாளர்கள் தங்களது செலவுகளை குறைக்க திட்டமிடும் வேளையில், அமேசான் நீண்ட கால உறவு மூலம் இதை ஈடு செய்ய முயற்சித்து வருகிறது. இதனால் கிளவுட் சேவை பிரிவில் வருவாய் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனத்தின் கிளவுட் சேவை வருவாய் 5 சதவீதம் சரிந்துள்ள வேளையில், மார்ச் காலாண்டில ஒட்டுமொத்த சேல்ஸ் அளவு 127.36 பில்லியன் டாலராக உள்ளது. அடுத்த காலாண்டில் வருவாய் 133 பில்லியன் டாலர் வரையில் உயரும் என கணக்கிடப்படுகிறது.

இதனுடன் அமேசான் குழுமத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஸ்ட்ரீமிங் வர்த்தக பிரிவில் கைவைத்துள்ளது, மக்கள் டிஜிட்டல் சேவைக்காக செலவு செய்யும் தொகை பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில் அமேசான் பிரிவு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி அமேசான் ஸ்டூடியோஸ் மற்றும் ப்ரைம் வீடியோ பிரிவில் சுமார் 100க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அமேசான் ஸ்டூடியோஸ் மற்றும் ப்ரைம் வீடியோ பிரிவில் சுமார் 7000 ஊழியர்கள் பணியாற்றி வரும் வேளையில் சுமார் 1 சதவீதத்திற்கும் அதிகமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது அமேசான்.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications