உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் வருகை தரும் இந்த நிகழ்வில் பக்தர்களின் சௌகரியத்திற்காக அமேசான் நிறுவனம் கிரியேட்டிவான வகையில் உதவி செய்துள்ளது.
மகா கும்பமேளா நிகழ்ச்சியில் அமேசான் நிறுவனம் அட்டைப்பெட்டிகளை கொண்டு புது வகையான படுக்கைகளை பக்தர்களுக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26 ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலுமிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பிரயாக்ராஜிற்கு பயணம் செய்த வண்ணம் இருக்கின்றனர். கங்கை, யமுனை , சரஸ்வதி ஆறுகள் ஒன்று கூடக்கூடிய திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக துறவிகள், சாதுக்கள், பக்தர்கள் என கோடிக்கணக்கானவர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையில் பிரயாக்ராஜில் அமேசான் நிறுவனம் பக்தர்களுக்காக ஒரு பிரத்தியேக வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது.
அட்டை பெட்டிகளை கொண்டு புதுமையான முறையில் படுக்கைகளை தயாரித்து அமேசான் நிறுவனம் வழங்கியிருக்கிறது. பொருட்களை டெலிவரி செய்வதற்காக தங்கள் நிறுவனம் வைத்திருக்கும் அட்டைப் பெட்டிகளை கொண்டு புதுமையான முறையில் ஒரு நபர் படுத்து உறங்கும் வகையிலான படுக்கைகளை அமேசான் நிறுவனம் தயாரித்து கும்பமேளா ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கியுள்ளது.
கும்பமேளா நிகழ்வுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் தங்களுடைய பொருட்கள் மக்களுக்கு எப்பொழுதுமே மகிழ்ச்சியை தரும் இந்த முறை மகா கும்பமேளா நிகழ்ச்சியில் சௌகரியத்தை தரும் வகையில் நாங்கள் இவற்றை உருவாக்கி இருக்கிறோம் எனக் கூறியுள்ளது.
அமேசான் டெலிவரி பாக்ஸ்களை கொண்டு சுமார் 1000 அட்டைப்பெட்டி படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அங்கு வரக்கூடிய பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
கும்பமேளா நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான இந்தியர்களோடு இணைவதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது எனக் கூறும் அமேசான் நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைமை செயல் அதிகாரி பிரக்யா சர்மா இந்த அட்டைப்பெட்டி படுக்கைகள் நூற்றுக்கணக்கான மக்களிடம் தங்கள் நிறுவனத்தை சென்று சேர்க்கிறது என்பதோடு மட்டுமில்லாமல் இது போன்ற ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் நாங்கள் சேவையாற்றுவதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
இந்த அட்டைப்பெட்டி படுக்கைகள் தற்காலிக ஓய்வு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என அமேசான் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் நாள்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் புனித நீராடி வருகின்றனர். எனவே மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications