அமேசான் ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. செம குஷியில் ஊழியர்கள்..!

ஆன்லைன் ஈ- காமர்ஸ் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான அமேசான், அதன் ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ் ஒன்றை அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம், அதன் டெலிவரி ஊழியர்கள் மற்றும் பேக்கிங் ஊழியர்களுக்கு, ஒரு முறை போனஸாக 300 டாலர்கள் வரையிலும், இதே கூடுதல் இழப்பீடும் (Compensations) கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது அமேசானின் முழு நேர ஊழியர்களுக்கு 300 டாலர்களும், இதே பகுதி நேர ஊழியர்களுக்கு 150 டாலர்களும் போனஸாக கொடுக்க உள்ளதாகவும் தெரிகிறது.

அமேசானுக்கு செலவு

அமேசானுக்கு செலவு

அமேசானின் இந்த திட்டத்திற்கு 500 மில்லியன் டாலர் செலவாகும் என்றும் தளவாடத் தலைவர் டேவ் கிளார்க் ஒரு வலைப்பதிவில் கூறியுள்ளார்.

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மறுபுறம் பல நிறுவனங்கள் வேலை குறைப்பு, சம்பள குறைப்பு, சம்பள உயர்வு நிறுத்தி வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆக இந்த காலகட்டத்தில் வரவேண்டிய சம்பளமாவது வருமா? வராதா? என்ற குழப்பமான மனநிலையே நீடித்து வருகிறது.

 

ஊழியர்களுக்கு சலுகைகள்

ஊழியர்களுக்கு சலுகைகள்

சமீப காலமாக அமேசான் அதன் ஊழியர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அடுத்த ஆண்டு ஜூன் 2021 வரை அமேசான் ஊழியர்கள் வீட்டில் இருந்தே அதன் ஊழியர்கள் பணிபுரியலாம் என்று கூறியிருந்தது. இது கொரோனா பரவல் காரணமாக அலுவலகத்திற்கு, திரும்புவதற்கான காலக்கெடுவை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் மீது கவனம்

ஊழியர்கள் மீது கவனம்

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான இது, சமீபத்திய மாதங்களில் சில ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், கொரோனா பெருந்தொற்று நோயின் போது கிடங்கு திறந்து வைத்திருப்பதன் மூலம், அமேசான் அதன் ஊழியர்களின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறினர். மேலும் அலுவலகத்திற்கு வரவிரும்பும் ஊழியர்கள், சமூக இடைவெளி, கை கழுவுதல், வெப்ப நிலை சோதனைகள் என பலவற்றிற்கும், குறிப்பிடத்தக்க நிதியினை அமேசான் ஒதுக்கியகவும் கூறியிருந்தது.

உழைப்புக்கு தகுந்த பரிசு

உழைப்புக்கு தகுந்த பரிசு

ஆக இப்படி கொரோனா காலத்திலும் தங்களது நலன்களை கருதாமல், பணியாற்றிய ஊழியர்களுக்கு அமேசான் கொடுக்கும் வெகுமதியே இந்த போனஸ் என்று கூட வைத்துக் கொள்ளலாம். உண்மையில் இந்த லாக்டவுன் காலத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த நிலையில், அவர்களுக்கு தேவையானதை, தேவையான இடத்தில் டெலிவரி செய்தது ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தான். ஆக அவர்களுக்கு போனஸ் என்பது, அவர்களின் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய வெகுமதி தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+