உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 4 மணி நேரத்தில் டெலிவரி என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அமேசான் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் நிறுவனம்
அமேசான் நிறுவனத்தின் 4 மணி நேர டெலிவரி சேவை என்பது ஏற்கனவே இந்தியாவில் 14 நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது 50 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த சேவை அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
50 நகரங்கள்
நாடு முழுவதும் 50 நகரங்களில் 4 மணி நேரத்தில் டெலிவரி செய்யும் சேவையில் சில பொருட்கள் மட்டுமே கட்டுக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பொருட்கள் வயர்லெஸ், நுகர்வோர் மின்னணுவியல், புத்தகங்கள், பொம்மைகள், ஊடகங்கள், சமையலறை, ஆடம்பரம், விளையாட்டு, வீடியோ கேம்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு உபகரணங்கள் ஆகியவை ஆகும்.
ஒரே நாளில் டெலிவரி
அமேசான் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரே நாளில் டெலிவரி என்ற முறையை அறிமுகப்படுத்தியது என்பதும் இந்த வசதி சூரத், மைசூரு, மங்களூரு, போபால், நாசிக், நெல்லூர், அனந்தபூர், வாரங்கல், காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் பாட்னா ஆகிய நகரங்களுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தகக்து.
சிறு நகரங்கள்
அமேசான் இந்தியாவின் சப்ளை செயின் & போக்குவரத்து சேவைகளின் இயக்குனர் அபினவ் சிங் இதுகுறித்து கூறியபோது, 'எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை செய்ய நாங்கள் எப்போதும் புதுமைகளை உருவாக்குகிறோம். ஒரே நாள் டெலிவரியை அடுத்து தற்போது 4 மணி நேரத்தில் டெலிவரி செய்கிறோம். இந்த சேவையை பெருநகரங்களுக்கு மட்டுமின்றி நகரங்கள், சிறு நகரங்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்' என்று கூறினார்.
2 நாட்களுக்குள் டெலிவரி
மேலும் 97 சதவீதத்திற்கும் அதிகமான பின்கோடு பகுதிகளுக்கு வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த இரண்டு நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படுவதாக அமேசான் தெரிவித்துள்ளது. மேலும் அமேசான் நிறுவனத்தின் ஒரே நாள் டெலிவரி சேவை செய்யும் பகுதிகள் ஆண்டுக்கு ஆண்டு இரண்டு மடங்கு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications