இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் தளமாக உருவெடுத்துள்ள அமேசான், தற்போது சக போட்டி நிறுவனங்களான பிளிப்கார்ட், ரிலையன்ஸ் உடன் போட்டிப்போடும் வருகிறது. ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் வழக்கில் வெற்றிபெற்றுள்ள அமேசான் நிறுவனத்திற்குத் தற்போது புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.
அமேசான் தனது இந்திய வர்த்தகத்தில் பல்வேறு முறைகேடுகளைச் செய்வதாகவும், லஞ்சம் கொடுப்பதாகவும் ஒரு பத்திரிக்கை வெளியிட்ட செய்தி, அமெரிக்காவில் இருக்கும் உயர்மட்ட நிர்வாகம் வரையில் சென்றுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தச் செய்தியை அடிப்படையாக அமேசான் தற்போது நிறுவனத்திற்குள்ளேயே கமிட்டி அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டு, இப்பணிகளை உடனடியாகத் துவங்கியுள்ளது.
அமேசான் ஊழல்
அமேசான், தனது இந்திய வர்த்தகத்தில் செலுத்தும் legal fees மூலம் பல பிரிவுகளுக்கு லஞ்சமாக அளிக்கப்படுகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கான விசாரணை செய்யக் குழு அமைக்கப்பட்ட உடனே அமேசான் நிறுவனத்தின் லீகல் அணியில் இருக்கும் ஒரு உயர் அதிகாரியை விடுமுறையில் அனுப்பியுள்ளது அமேசான்.
அமேசான் கடுமையான கட்டுப்பாடு
இதுகுறித்து அமேசான் வெளியிட்டுள்ள பதிலில் எவ்விதமான ஊழல் மற்றும் சட்ட விரோதமான பணிகளும் அமேசானில் இடமில்லை, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முறையாக ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் விசாரணை குறித்து எவ்விதமான தகவல்களையும் தற்போது அளிக்க முடியாது என அமேசான் அறிவித்துள்ளது.
முறைகேடுகள்
மார்னிங் கான்டெக்ஸ்ட் என்னும் செய்தி தளம் அமேசான் இந்திய வர்த்தகத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்துச் செய்தி வெளியிட்டது. இதன் பின் அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க நிர்வாக இந்திய வர்த்தகத்தில் உடனடியாகக் குழுவை அமைத்து விசாரணை துவங்கியுள்ளது.
சிஇஓ ஆண்டி ஜாஸி
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பதவியில் இருந்து ஜெப் பெசோஸ் விலகிய நிலையில் தற்போது மொத்த வர்த்தகமும் ஆண்டி ஜாஸி கையில் வந்துள்ளது. இந்திய வர்த்தகம் மற்றும் இந்திய சந்தை மீதும் ஜெப் பெசோஸ் போலேவே அதிகம் ஆர்வம் காட்டும் ஆண்டி ஜாஸி குற்றச்சாட்டுகளைப் பார்த்த உடனேயே விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்திய ரீடைல் சந்தை
இந்திய ரீடைல் சந்தையைப் பிடிப்பது அவ்வளவு எளிதான ஒன்று இல்லை, இதற்கிடையில் பிளிப்கார்ட், ரிலையன்ஸ், டாடா, எனப் பெரிதும் சிறிதுமாகப் பல கடுமையான போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்திய வர்த்தகத்திற்காகப் பல பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்வதாக அமேசான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி
மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்லும் பொருட்டு 1 கோடிக்கும் அதிகமான இந்திய வர்த்தகத்தை டிஜிட்டல் சந்தைக்கும் கொண்டு வருவர திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தற்போது 1, 00, 000க்கும் அதிகமான ஊழியர்களை வைத்துள்ளது அமேசான்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications