காதி பெயரில் போலி.. 160 பொருட்கள் அடையாளம்.. அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இருந்து நீக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் ஆன்லைன் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் உள்ளிட்ட பல தளங்களில் இருந்து 160 போலி காதி பொருட்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

காதி இந்தியா நிறுவனம், காதி இந்தியா என்ற போலியான பெயரில் இந்த பொருட்கள் வலம் வருவதாக, அவற்றை நீக்க அமேசான் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்களில் இருந்து நீக்க வைத்துள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், காதி இந்தியா என்னும் பெயரில் பொருட்களை விற்று வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

என்னென்ன பொருட்கள்?
 

என்னென்ன பொருட்கள்?

இது காதி முகக் கவசங்கள், மூலிகை சோப்புகள், குர்தா, ஹெர்பல் மெஹந்தி, ஹெர்பல் ஷாம்புகள், மூலிகை சோப்புகள், ரவிக்கைகள், குர்தா உள்ளிட்ட பல பொருட்கள் காதி பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. காதி உற்பத்தியாளர்கள் முறையான உரிமம் பெற்ற பின்னர் தான் காதியின் பெயரை உபயோகிக்க அனுமதிக்கிறது. அதனை மீறி காதியின் பெயர் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால், இதே நடவடிக்கை தொடரும் எனவும் காதி எச்சரித்துள்ளது.

காதி பெயருக்கு சேதம் விளைவிக்கின்றன

காதி பெயருக்கு சேதம் விளைவிக்கின்றன

அண்மையில் தான் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், காதி பெயரை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்து வந்த 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஏனெனில் இந்த நிறுவனங்கள் காதிக்கு உள்ள நல்ல பெயருக்கு சேதம் விளைவிப்பதாகவும், ஆயிரக்கணக்கான காதி கைவினைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதாகவும் KVIC குற்றம் சாட்டியிருந்தது.

ரூ.500 கோடி இழப்பீடு வழக்கு

ரூ.500 கோடி இழப்பீடு வழக்கு

அதோடு கடந்த மாதம் காதி பெயரில் Khadi Essentials and Khadi Global என்ற இரு நிறுவனங்களும், காதி என்ற பெயரில் அழகுசாதன பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகளை அங்கீகரிக்கப்படாமல் விற்பனை செய்ததற்காக KVIC நோட்டீஸ் விடுத்தது. அவற்றோடு மும்பை உயர் நீதிமன்றத்தில் பேப் இந்தியா (Fabindia) நிறுவனத்திடம் 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்ட வழக்கு நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு
 

வாய்ப்பு

இது குறித்து காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் வினய் குமார் சக்சேனா கூறுகையில், காதி என்ற பெயரில் மோசடி செய்பவர்களுக்கு தயாரிப்புகளை விற்பனை செய்பதை நிறுத்தவோ அல்லது சட்ட ரீதியான நடவடிக்கையினை எதிர்கொள்ளவோ வழங்கியுள்ளது.

கைவினைஞர்களை பாதிக்கும்

கைவினைஞர்களை பாதிக்கும்

காதி கைவினைஞர்களின் நலனைப் பாதுகாக்க பல்வேறு நிறுவனங்களுக்கு சட்ட அறிவிப்புகள் வழங்கப்படுள்ளன. இந்த விதிமீறலால் உண்மையான காதி பொருட்களை தயாரிக்கும் எங்கள் கைவினைஞர்களை இது நேரடியாக பாதிக்கிறது என்றும் சக்சேனா கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon, flipkart and other to removed 160 fake khati products in portal

KVIC gets Amazon, flipkart and other to removed 160 fake khati products in portal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X