தீபாவளி பண்டிகை காலத்தில் 1 லட்சம் கோடிக்கும் அதிகமான வர்த்தகத்தை பதிவு செய்த ஈகாமர்ஸ் நிறுவனங்கள் கொண்டாடத்தில் இருந்து நிலையில், இன்று நடந்த சோதனை அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த அதிரடி சோதனை எங்கெல்லாம் நடந்தது..? எதற்காக நடந்தது..? இந்த சோதனைக்கு ஆரம்ப புள்ளி எது..?
அமலாக்கத் துறை (ED), அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களின் முக்கிய விற்பனையாளர்கள் மீது மிகப்பெரிய விசாரணையை தொடங்கியுள்ளது. நவம்பர் 7 ஆம் தேதி, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் -ன் விற்பனையாளர்களுக்கு சொந்தமான இடத்தில் அதிரடி சோதனையை அமலாக்க துறை செய்தது.

டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் பஞ்ச்குளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இது வெளிநாட்டுச் செலவாணி மேலாண்மைச் சட்டம் (FEMA) விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தப்பட்டு உள்ளது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை கட்டுப்படுத்தி, மற்ற விற்பனையாளர்களுக்கு தங்களுடைய தளத்தில் சமமான வாய்ப்பை வழங்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, அப்பாரியோ ரீடைல், ஸ்ரேயாஷ் ரீடைல், தர்சிதா ரீடைல் மற்றும் அஷியானா ரீடைல் ஆகியவை விற்பனையாளர்கள் இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட விற்பனையாளர்களாக உள்ளனர். இந்த நிலையில் இந்த விற்பனையாளர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தியுள்ளது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தங்கள் தளங்களில் சில விற்பனையாளர்களை ஆதரித்து, சக விற்பனையாளர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்கும் போட்டித்தன்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கண்டறிந்தது CCI.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இந்தியாவில் தங்களது ஈகாமர்ஸ் தளத்தில் சொந்தமாக பொருட்களை விற்க கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் இந்த விதிமுறையை பல விதிமாக மீறி, பல புதிய வழிகளில் சொந்தமாக பொருட்களை விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications