உலகின் 2வது பெரும் பணக்காரர், ஈகாமர்ஸ் சாம்ராஜ்ஜியமான அமேசனின் முன்னாள் சிஇஓ ஜெஃப் பெசோஸ் பல வருடமாக ஒரே சம்பளத்தை வாங்கி வருகிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆனால் இவருடைய சம்பளத்திற்கும் சொத்து மதிப்புக்கும் சம்பந்தமே இல்லை.
ஜெப் பெசோஸ் அமேசானில் அவரது அடிப்படைச் சம்பளம் 1998 ஆம் ஆண்டிலிருந்து மாறாமல் வைத்திருக்கிறார், ஆண்டுக்கு 80,000 டாலர் சம்பளத்தை தான் தொடர்ந்து பெற்று வருகிறார். ஆனால் தற்போது அவருடைய மொத்த சொத்து மதிப்பு அதிர்ச்சியூட்டும் வகையில் 241 பில்லியன் டாலராக உள்ளது.

இந்த மாபெரும் வித்தியாசத்திற்கு முக்கியமான காரணம், ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பில் பெரும் பகுதி அமேசான் பங்கு இருப்பில் இருந்து வருகிறது. சாமானிய மக்களின் மொத்த வருமானத்தில், பெரும் பகுதி சம்பளமாக தான் இருக்கும், ஆனால் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பில் அப்படியில்லை.
கிட்டத்தட்ட 26 ஆம் ஆண்டுகளாக ஒரே சம்பளத்தை வாங்குவது குறித்து ஜெப் பெசோஸ்-யிடம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டபோது, "என்னுடைய நிறுவனத்தில் இருந்து நான் அதிகமாக எடுத்துக்கொள்வது என்பது சரியாக இருக்காது, இதேவேளையில் என்னிடம் நிறுவனத்தின் பங்குகள் அதிகமாக இருக்கிறது, நிறுவனம் எனக்கு பல சலுகைகளை கொடுத்து வருகிறது. இப்படியிருக்கும் போது நான் ஏன் அதிக சம்பளத்தை பெற வேண்டும் என விளக்கியுள்ளார்.
ஜெப் பெசோஸ் அமேசானில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கிறார். இந்த பங்கு வளர்ச்சி மூலம் 2023 மற்றும் 2024 க்கு இடையே மட்டும், வருடத்தின் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் அவரது சொத்து மதிப்பு சுமார் 8 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
CEO பதவியில் இருந்து விலகியதில் இருந்து, ஜெப் பெசோஸ் தனது அமேசான் பங்குகளை அவ்வப்போது விற்பனை செய்து வருகிறார். 2025 ஆம் ஆண்டு முடிவதற்குள் 2.5 கோடி பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்.
இப்படி நிறுவனத்தின் வாயிலாகச் சலுகையும், பங்கு விற்பனை வாயிலாகப் பணமும் பெற்று வரும் ஜெப் பெசோஸ்-க்கு 80000 ரூபாய் சம்பளம் என்பது பெரிய விஷயமில்லை. இவர் மட்டும் அல்லாமல் மார்க் ஜூக்கர்பெர்க், ஸ்டீவ் ஜாப்ஸ் உட்பட பலர் வெறும் 1 டாலர் சம்பளம் பெறும் வழக்கத்தையும் கொண்டு உள்ளனர்.
இந்தக் குறைந்த சம்பள அணுகுமுறை பில்லியனர்களுக்கு வரி குறைப்பு வாய்ப்பையும் வழங்குகிறது. இதுவும் சம்பளத்தை குறைவாக வைத்திருக்க முக்கியமான காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications