உலகின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் கிளவுட் சேவை நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது நீண்ட நாள் காதலியும், கேர்ள்பிரெண்டான லாரன் சான்செஸ் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உலகமே ஆச்சரியப்படும் வகையில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள்.
ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் அமெரிக்காவின் ஆஸ்பென் பகுதியில் பிரம்மாண்டமான திருமணத்தை நடத்தத் தயாராகி வருகின்றனர். ஆஸ்பெனில் அடிக்கடி விடுமுறை செல்லும் இந்த ஜோடி, தங்கள் திருமணத்திற்குச் சரியான இடமாக இந்த இடத்தை தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Lauren Sanchez 2023 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட போது அவரது கையில் இருந்த ஹார்ட் வடிவிலான 20 கேரட் வைரம் மோதிரம் அணிந்திருந்தது பலராலும் கவனிக்கப்பட்டது. இதன் மூலம் அப்போதே இருவரும் திருமணத்திற்குத் தயாராகியுள்ளனர், ரகசியமாக என்கேஜ் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியானது.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் ஜெப் பெசோஸ்-க்கு சொந்தமான KORU என்னும் ஆடம்பர கப்பலில் மத்தியதரைக் கடலில் பயணம் செய்துகொண்டு இருந்த போது இந்த 20 கேரட் வைரம் மோதிரம் கொடுத்து திருமணத்திற்கு ஜெப் பெசோஸ் ப்ரோபோஸ் செய்தார், இப்போது ஜெப் பெசோஸ்-ன் நெருங்கிய நண்பர்கள் உடன் இருந்தாக கூறப்பட்டது.
இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும், இந்த திருமணத்திற்கு மிகவும் முக்கியமான ஹைய் ப்ரொபைல் பிரபலங்கள் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று தி சன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

உலகின் இரண்டாவது பணக்காரரான ஜெஃப் பெசோஸும், முன்னாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான லாரன் சான்செஸும் 2019 முதல் டேட்டிங் செய்து வருகின்றனர். இருவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பின்னர், இருவரும் சில வருடங்கள் ரகசிய உறவில் இருந்தனர்.
இவர்களது கள்ள காதல் 2018 ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்த நிலையில் ஜெஃப் பெசோஸ் தனது மனைவியான மெக்கன்சி ஸ்காட் விவாகரத்து செய்தார். இவர்களுடைய விவாகரத்து தான் மிகவும் காஸ்ட்லியான விவாகரத்தாகப் பார்க்கப்படுகிறது. மெக்கன்சி ஸ்காட் ஜெப் பெசோஸ் வைத்திருந்த பங்குகளில் பெரும் பகுதி பெற்று பில்லியனர் ஆனார்.

60 வயதாகும் ஜெப் பெசோஸ் தற்போது 235 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 2வது பெரும் பணக்காரராக உள்ளார், 2024 ஆம் ஆண்டில் மட்டும் இவருடைய சொத்து மதிப்பு சுமார் 57.7 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
லாரன் சான்செஸ்-க்கு தற்போது 54 வயது, இவர் The View, KTTV, Fox 11 போன்ற பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார். அமெரிக்காவில் அதிகம் அறியப்படும் தொலைக்காட்சி பிரபலங்களில் இவரும் ஒருவர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications