அமேசான் ஜெஃப் பெசோஸ் தன் வசம் இருக்கக்கூடிய அமேசான் நிறுவன பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்ய அவர் முடிவு எடுத்துள்ளார் என அந்த நாட்டு பங்குச்சந்தையில் அமேசான் நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் அமேசான் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 200.43 டாலர்கள் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து குறிப்பிட்ட சில பங்குகளை விற்பனை செய்ய ஜெஃப் பெசோஸ் முடிவு செய்துள்ளதார்.

இதன்படி தன்னிடம் மொத்தமுள்ள பங்குகளில் 25 மில்லியன் பங்குகளை தற்போதைக்கு விற்பனை செய்ய இருக்கிறார். இந்த விற்பனையை தொடர்ந்து ஜெஃப் பெசோஸ் வசம் இருக்கும் அமேசான் பங்குகளின் எண்ணிக்கை 912 மில்லியன் என மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் 8.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை ஜெஃப் பெசோஸ் விற்பனை செய்தார். இதனை எடுத்து தற்போது மீண்டும் 5 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்ய உள்ளார்.
ஜெஃப் பெசோஸை பொறுத்தவரை உலகிலேயே இரண்டாவது பெரும் பணக்காரராக இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 214.4 பில்லியன் டாலர்கள் ஆகும். அமேசான் நிறுவனம் உலகிலேயே முன்னனி ஈ காமர்ஸ் தளமாக செயல்பட்டு வருகிறது.
அமேசான் மட்டுமின்றி விண்வெளி நிறுவனமான ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். அண்மையில் கூட ப்ளூ ஒரிஜின் நிறுவனம் ஆறு பேர் கொண்ட ஒரு விண்வெளி ஓடத்தை பரிசோதனை செய்து பார்த்தது.
அமேசான் நிறுவன பங்குகளை பொறுத்தவரை 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. அமேசான் நிறுவனம் அண்மை காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 2024 ஆம் நித்திய ஆண்டின் முதல் காலாண்டு இந்த நிறுவனத்தின் வளர்ச்சி கணிசமான அளவு உயர்ந்திருந்தது.
இதனை அடுத்து நிறுவன தலைமை பொறுப்புகளிலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அண்மையில் கூட இந்த நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் துறை தலைவராக ஆடம்ஸ் செலிப்ஸ்கிக்கு பதிலாக மேட் கேர்மென்ட் நியமனம் செய்யப்பட்டார்.
பங்கு சந்தை மதிப்பீட்டில் அமேசான் நிறுவனம், கடந்த மாதம் தான் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பை எட்டியது. ஏற்கனவே ஆப்பிள்,நிவிடியா, மைக்ரோசாப்ட் ஆகியவை 3 டிரில்லியன் என்ற உச்சத்தில் உள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications