லாக்டவுன் காலத்தில் வொர்க் ஃபர்ம் ஹோம் எந்த அளவுக்கு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு லாபத்தையும், வர்த்தகத்தையும் வாரி வழங்கி பெரிய அளவில் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் லாக்டவுன் முடிந்த பின்பு மூன்லைட்டிங், குவைட் குவிட்டிங் என பல பிரச்சனைகளை உருவாக்கியதன் மூலம் வொர்க் ஃப்ரம் ஹோம் சலுகை வேகமாக ரத்து செய்ய வேண்டும் என அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் முடிவு செய்த நிலையில், பல நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கையை எடுத்தது.
இதனால் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் தான் ஹைப்ரிட் வொர்க் மாடல் என்ற திட்டம் வந்தது. பொருளாதாரம் மந்த நிலை, வர்த்தகம் சரிவு, வருவாய் மற்றும் லாபத்தில் மோசமான பாதிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்து செயல்திறன் மேம்படுத்த முயற்சி செய்யும் போது மீண்டும் வொர்க் ஃப்ரம் ஹோம் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத பல நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து மேனஜர்களுக்கும் சிறப்பு அதிகாரம் கொடுத்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் ரிட்டன் டூ ஆபீஸ் கட்டுப்பாட்டில் முக்கியமாக விஷயமாக இருக்கும் வாரத்தில் 3 நாள் அலுவலகம் வரும் விதிமுறைய பின்பற்றாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய அனைத்து மேனேஜர்களுக்கும் அதிகாரம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த அதிகாரம் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலகளவில் அனைத்து வர்த்தக சந்தையிலும் அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளதாக global manager guidance கீழ் அறிவிக்கப்பட்டு உள்ளதாக பிஸ்னஸ் இன்சைடர் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்த வழிமுறையில் முதலில் வாரத்தில் 3 நாள் அலுவலகம் வராத ஊழியர்கள் உடன் மேனேஜர்கள் தனிப்பட்ட முறையில் பேச அறிவுறுத்தப்படுவது மட்டும் அல்லாமல் இந்த பேச்சுவார்த்தையை பதிவு செய்யவும் கூறப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ஈமெயில் மூலம் மேனேஜர்கள் ஊழியர்களுக்கான தீர்வு அளிக்க உத்தரவிட்டு உள்ளது.
இதன் பின்பும் வாரத்திற்கு 3 நாள் அலுவலகம் வராத ஊழியர்களிடம் கடைசியாக ஒரு ஆலோசனையை நடத்தி பணிநீக்கம் செய்வதற்கான வழிமுறைகளை தொடர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அமேசான் நிர்வாகம் அதன் மேனேஜர்களுக்கு அதிகாரம் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications