அமேசான் மற்றும் கூகுள் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள், தனது வெளிநாட்டு ஊழியர்களுக்குக் குடியுரிமை பெற்றுத் தருவதற்காக பணிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
இதன் படி 2024 ஆம் ஆண்டுக்கான கிரீன் கார்டு விண்ணப்பங்களை முன்னணி டெக் நிறுவனங்கள் விண்ணப்பிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மைக்ரோசாப்ட் உட்பட பல முன்னணி டெக் நிறுவனங்களில் பணிநீக்கம் செய்ததன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெக் துறையில் தற்போது நிலவி வரும் கடும் போட்டி காரணமாகவும், ஏஐ பயன்பாடுகள் அதிகரித்துள்ளதன் காரணமாகவும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்திய ஐ.டி துறை வல்லுநர்கள் கிரீன் கார்டு பெறுவதற்கான விண்ணப்ப செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த தடை, பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இரண்டுமே, "PERM" என்ற முக்கியமான விண்ணப்ப செயல்முறையை அடுத்த ஆண்டு வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
அமெரிக்க டெக் நிறுவனங்கள் அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள நிலையில், அமெரிக்க சந்தையில் அளவுக்கு அதிகமான டெக் ஊழியர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் கிரீன் கார்டு பெற அமெரிக்க நிறுவனங்கள் முயல்வதை அமெரிக்க அரசு எதிர்கிறது.
பொதுவாக PERM முறையை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்த முக்கியமான காரணம், அமெரிக்கச் சந்தையில் சிறப்பு திறன் வாய்ந்த ஊழியர்கள் தட்டுப்பாடு இருப்பதால், இதை வெளிநாட்டு ஊழியரை வைத்து கேப்-ஐ நிரப்புவதற்காகத் தான். ஆனால் தற்போது பணிநீக்கத்தால் சந்தையில் அளவுக்கு அதிகமான அமெரிக்க ஐடி ஊழியர்கள் உள்ளனர். இதனாலேயே PERM விண்ணப்பங்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த முடிவால் தற்போது அமெரிக்காவில் கூகுள், அமேசான் அலுவலகத்தில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் கிரீன் கார்டு பெறும் வாய்ப்பை இந்த ஆண்டு இழக்கின்றனர். மனமிருந்தால் மார்கபந்து, அடுத்த வருடம் நிச்சயம் கிடைக்கும் நம்பிக்கையோடு இருங்க NRI மக்களை..!
அமெரிக்க தொழில்துறை துறை நிர்வகிக்கும் "PERM" என்பது, ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு சான்றிதழை (Permanent Labor Certification) பெறுவதற்கான ஒரு செயல்முறை ஆகும்.
அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள், சம்பளம் மற்றும் பணிச்சூழலைப் பாதுகாப்பதற்கும், அதே நேரத்தில், தகுதிபெற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அமெரிக்காவில் குடியுரிமை பெற்று பணிபுரிய வாய்ப்பளிப்பதற்கு PERM திட்டம் பெரிய அளவில் உதவுகிறது.
கிரீன் கார்டு பெறுவதற்கான விண்ணப்ப செயல்பாட்டில் "PERM" என்பது முதல் கட்ட பணிகளாக உள்ளது. அதாவது ஒரு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட ஊழியரை முக்கியமானவர் என்று கருதி, அவருக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை அளிக்க அமெரிக்க அரசுக்கு, அமெரிக்க நிறுவனம் பரிந்துரை செய்யும் முறை தான் இந்த PERM.
அமேசான் நிறுவனம், இந்த ஆண்டு தொடக்கத்தில், "செயல்பாட்டுச் சிக்கல்கள்" காரணமாக 2024 ஆம் ஆண்டு முழுவதும் "PERM" விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தனது ஊழியர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில் தெரிவித்தது.
இதேபோல், ஜனவரி 2023ல் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த கூகுள் நிறுவனமும், "PERM" விண்ணப்பங்களை விண்ணப்பம் செய்வதை நிறுத்தி வைத்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை PERM செயல்முறை தொடங்கப்படாது என்றும் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications