அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024, குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிஜிட்டல் பொருட்களின் விற்பனையில், ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதிக அளவிலான சலுகைகள், கேஷ்பேக் திட்டங்கள் மற்றும் No-Cost EMI சலுகைகள் போன்ற மலிவு விலை விருப்பங்களை வழங்கியது. இதன் காரணமாக இந்தியா முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மேம்படுத்த வழங்கப்பட்ட ஆஃபர்களை பயன்படுத்திக் கொண்டதாக அமேசான் இன்று ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 27-ஆம் தேதி அன்று கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது. வழக்கம் போல் பிரைம் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே அக்சஸ் கிடைத்தது. முதல் 48 மணி நேரத்தில் மட்டும் 11 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ஆஃபர்களை பயன்படுத்திக் கொண்டதாக அமேசான் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களில் 80 சதவீதம் பேர் டயர்-2 மற்றும் சிறிய நகரங்களில் இருந்து வந்தவர்கள்.

ஸ்மார்ட்போன்: கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, அமேசானில் முதன்முறையாக 2 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மொபைல் போன் வாங்கினர். பிரீமியம் ஸ்மார்ட்போன் வகைகளான ரூ. 30,000-க்கு மேல் உள்ள ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 30 சதவீத அதிக விற்பனை வளர்ச்சியைக் கண்டது.
ஆப்பிள், ஒன்பிளஸ் மற்றும் சாம்சங் ஆகியவை மிகவும் விருப்பமான பிராண்டுகளாக இருந்தன. சுவாரஸ்யமாக, இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையில் கிட்டத்தட்ட 70 சதவீதம் டயர் 2 மற்றும் சிறிய நகரங்களில் இருந்து வந்த ஆர்டர்களாகும்.
அமேசான் அறிக்கையின் படி, பெரிய திரையைக் கொண்ட TV-கள் அதிக அளவில் விற்பனையானது. இது மொத்த டிவி விற்பனையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு மேல் என்று கூறப்படுகிறது. சாம்சங், சியோமி, சோனி மற்றும் எல்ஜி ஆகிய பிராண்டுகள் வாடிக்கையாளர்களின் அதிக ஆதரவைப் பெற்றது. மீண்டும், கிட்டத்தட்ட 80 சதவீத தொலைக்காட்சி ஆர்டர்கள் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களிலிருந்து வந்ததாக அமேசான் தரவு தெரிவிக்கிறது.
கேமிங் லேப்டாப்கள் விற்பனை முதல் 48 மணிநேரத்தில் 19X விற்பனை வளர்ச்சியைக் கண்டது. பிரீமியம் கேமிங் லேப்டாப்களும் அதிக விற்பனை வளர்ச்சியை பதிவுசெய்தது.
டேப்லெட் சந்தையும் அதீத வளர்ச்சியடைந்தது. 60 சதவீத விற்பனை ரூ.30,000 முதல் ரூ.50,000 என்ற விலை வரம்பில் இருந்தது. ஐபாட்கள் மற்றும் சாம்சங் டேப்லெட்டுகள் முறையே 63X மற்றும் 12X ஆண்டு வளர்ச்சியைக் கண்டன. பிரீமியம் ANC ஹெட்ஃபோன்கள் மற்றும் பார்ட்டி ஸ்பீக்கர்களும் அதிகம் விற்பனையானது.
கேமரா பிரிவில், முதல் முறையாக, அமேசான் பிரீமியம் கேமராக்களில் 18 மாத நோ-காஸ்ட் EMI விருப்பத்தை வழங்கியது. கூடுதலாக, வீட்டுப் பாதுகாப்புப் பொருட்களுக்கான தேவை அதிகரித்தது, ஸ்மார்ட் டோர் லாக்குகள் விற்பனையில் 60 சதவீதம் அதிகரிப்பைக் கண்டன.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications