Amazon Great Indian Festival Sale: முரட்டு தள்ளுபடியில் ஸ்மார்ட்ஃபோன்கள்! மிரள வைக்கும் ஆஃபர்கள்!

இந்தியர்களுக்கு இது பண்டிகை காலம். அக்டோபர் நவம்பர் மாதங்களில், இந்தியாவில் வரிசையாக நவராத்திரி, தசரா, விஜய தசமி, மிலாடி நபி, தீபாவளி என தொடர்ந்து பல பண்டிகைகள் வர இருக்கின்றன.

இந்த பண்டிகை காலங்களில் புதிய பொருட்களை வாங்குவது நம் இந்தியர்களின் வழக்கமாக இருக்கிறது.

இந்த பண்டிகை காலங்களில், வாடிக்கையாளர்களை ஈர்க்க, அமேசான் கம்பெனி Amazon Great Indian Festival Sale அறிவித்து இருக்கிறது. இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனை, அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இன்றே தொடங்கிவிட்டது.

விற்பனை தொடக்கம்

விற்பனை தொடக்கம்

மற்ற வாடிக்கையாளர்களுக்கு, நாளை தான் தொடங்குகிறது. இந்த சிறப்பு பண்டிகை கால விற்பனையில் பல முன்னணி கம்பெனிகளின் ஸ்மார்ட்ஃபோன்களை முரட்டு தள்ளுபடியில் கொடுக்கிறது அமேசான் கம்பெனி. எந்த கம்பெனி ஸ்மார்ட்ஃபோன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி கொடுக்கிறார்கள்? கூடுதலாக என்ன ஆஃபர் கொடுக்கிறார்கள் போன்றவைகளைப் பார்ப்போம்.

Vivo V17 ₹10,000 தள்ளுபடி

Vivo V17 ₹10,000 தள்ளுபடி

சீன கம்பெனியான விவோ கம்பெனியின் இந்த வி17 ரக ஸ்மார்ட்ஃபோன் நான்கு பின் பக்க கேமராவைக் கொண்ட சூப்பர் ஸ்மார்ட்ஃபோன். 8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னல் மெமரி, க்வால்காம் ஸ்னாப் டிராகன் 675AIE உடன் வருகிறது. இந்த ஸ்மார்டோனின் விலை 27,990 ரூபாய். ஆனால் அமேசான் இந்த சிறப்பு விற்பனையில் 17,990 ரூபாய்க்கு விற்கிறார்கள். இது போக ஹெச்டிஎஃப்சி வங்கியின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால் 10 % கூடுதல் சலுகை வேறு உண்டாம்.

Samsung Galaxy Note 10 Lite ₹5,000 தள்ளுபடி

Samsung Galaxy Note 10 Lite ₹5,000 தள்ளுபடி

தென் கொரியாவின் பிரம்மாண்ட எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான சாம்சங்கின் தயாரிப்பு இது. 12 எம் பி அல்ட்ரா வைட் கேமரா, 32 எம்பி செல்ஃபி கேமரா, 6 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னல் மெமரி, Exynos 9810 ஆக்டா கோர் பிராசசர் உடன் வரும் இந்த சூப்பர் ஸ்மார்ட்ஃபோனின் விலை 43,000 ரூபாய். ஆனால் அமேசான் பண்டிகை கால சலுகையாக, 5,010 ரூபாய் தள்ளுபடியில் 37,990 ரூபாய்க்கு விற்கிறது. ஹெச்டிஎஃப்சி வங்கியின் கார்டைப் பயன்படுத்தினால் 10 % கூடுதல் சலுகை உண்டாம்.

OnePlus 8 ₹5,000 தள்ளுபடி

OnePlus 8 ₹5,000 தள்ளுபடி

கேமராவுக்கு என்றே பெயர் பெற்று தன் விற்பனையை அதிகரித்து வரும் ஒன் பிளஸ் கம்பெனியின் இந்த ஸ்மார்ட்ஃபோன், 48 எம்பி பின் பக்க கேமரா, 12 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டர்னல் மெமரி, Qualcomm Snapdragon 865 Kryo 585 CPU ஆக்டா கோர் பிராசசர், 4,300 எம் ஏ ஹெச் லித்தியம் ஐயான் பேட்டரி உடன் வருகிறது. இதன் விலை 49,999 ரூபாய். பண்டிகை காலத்தை முன்னிட்டு, 5,000 ரூபாய் தள்ளுபடி விலையில் 44,999 ரூபாய்க்கு விற்கிறது அமேசான். ஹெச்டிஎஃப்சி வங்கியின் கார்டைப் பயன்படுத்தினால் 10 % கூடுதல் சலுகை உண்டாம்.

Xiaomi Mi 10 ₹10,000 தள்ளுபடி

Xiaomi Mi 10 ₹10,000 தள்ளுபடி

சியாமியின் ரசிகர்களுக்கு இந்த நல்ல செய்தி. சியாமியின் Mi 10 ஸ்மார்ட்ஃபோன் 108 எம் பி நான்கு கேமரா, 2.84GHz Qualcomm Snapdragon 865 ஆக்டா கோர் பிராசசர், 4,780 எம் ஏ ஹெச் லித்தியம் பாலிமர் பேட்டரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டர்னல் மெமரி உடன் வருகிறது. இதன் விலை 59,999 ரூபாய். பண்டிகை காலத்தை முன்னிட்டு 49,999 ரூபாய்க்கு அமேசான் விற்கிறதாம். ஹெச்டிஎஃப்சி வங்கியின் கார்டைப் பயன்படுத்தினால் 10 % கூடுதல் சலுகை உண்டாம்.

Apple iPhone 11 ₹10,000 தள்ளுபடி

Apple iPhone 11 ₹10,000 தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் ரசிகர்களுக்கு உண்மையிலேயே இந்த தீபாவளி ஒரு கொண்டாட்டம் தான். டியூயல் கேமரா, 12 எம் பி அல்ட்ரா வைட், நைட் மோட், 12 எம் பி முன் கேமரா, மூன்றாம் தலைமுறை A13 Bionic chip, அதிவேக சார்ஜிங் கேபிள் உடன் வரும் 64 ஜிபி ஆப்பிள் ஐபோன் 11-ன் விலை 64,900 ரூபாய். இப்போது இயர் பாட் & சார்ஜிங் அடாப்டர் உடன் சேர்த்தே, 16,901 ரூபாய் தள்ளுபடி கொடுத்து 47,990 ரூபாய்க்கு விற்கிறது அமேசான். ஹெச்டிஎஃப்சி வங்கியின் கார்டைப் பயன்படுத்தினால் 10 % கூடுதல் சலுகை உண்டாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+