அமேசான் இந்தியாவின் ஊழியர்கள் சுமார் 1000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் தொழில் நுட்ப பிரிவு, மனித வள பிரிவு என பல துறைகளிலும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்களும் அதிகளவிலான பணியாளர்களை பணியமர்த்தியன. கொரோனா காலகட்டத்தில் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த மக்கள், கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க முடியாத சூழலில் ஆன்லைனில் தேவையான பொருட்களை வாங்கினர்.
கொரோனா காலத்தில் சூடு பிடித்த வணிகம்
அந்த காலகட்டத்தில் அதிகளவிலான ஆர்டர்கள் ஆன்லைனில் குவிந்ததால், இகாமர்ஸ் நிறுவனங்கள் வேறு வழியின்றி அதிகளவிலான ஊழியர்களை பணியமர்த்தின. அமேசான் இந்தியா நிறுவனமும் அந்த காலகட்டத்தில் பணியமர்த்தலை பெரியளவில் செய்தது. எனினும் கொரோனாவுக்கு பின்னரும் பெரியளவில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் பணியில் தொடர்ந்தனர்.
தேவையில் தாக்கம்
தற்போது உலகளாவிய அளவில் நிலவி வரும் மந்த நிலையில், தேவையானது பெரியளவில் சரிவினைக் கண்டுள்ளது. பணவீக்கமும் உச்சத்தில் உள்ள நிலையில், இதுவும் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தான் அமேசான் இந்தியா நிறுவனம் பணி நீக்கத்தினை செய்துள்ளது.
நிச்சயமற்ற பொருளாதார சூழல்
இது குறித்து அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, தற்போது உலகளாவிய அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற பொருளாதார சூழலுக்கு மத்தியில், தேவையானது சரிவினைக் கண்டுள்ளது. இது வளர்ச்சியில் சரிவினைக் ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. இதற்கிடையில் தான் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளது.
எங்கு எங்கு பணி நீக்கம்
தற்போது அமேசானில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உதவும் விதமாக, மருத்துவ காப்பீடு மற்றும் வேறு வேலை தேடுவதற்கான ஆதரவினை நாங்கள் வழங்க உள்ளோம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அமேசானின் இந்த பணி நீக்க நடவடிக்கையானது பெங்களூரு, குருகிராம் உள்ளிட்ட அலுவலகங்களில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெயில் மூலம் தகவல்
தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் ஊழியர்களுக்கு இமெயில் மூலமாக தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த பணி நீக்கம் குறித்து முழுமையான விவரங்களை ஊழியர்கள் அலுவலகம் வந்தும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த பணி நீக்க நவடிக்கையினால், ஊழியர்களுக்கு 5 மாத சமபளம் கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சற்றே ஆறுதல்
எனினும் இது குறித்த அதிகாரப் பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஒரு புறம் பணி நீக்கம் என்பது மிகப்பெரிய கவலை அளித்தாலும், தற்போதைக்கு புதிய வேலை தேடுவதற்காக, அடுத்த சில மாதங்கள் சம்பளம் கிடைக்கும் என்பதால், இது சற்றே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கண்ணீருடன் வெளியேற்றம்
அமேசான் இந்தியாவின் இந்த அறிவிப்பினால், பல ஊழியர்களும் கண்ணீருடன் வெளியேறி வருவதாகவும், ஏற்கனவே தங்களுடன் பணி புரிந்த ஊழியர்கள் பலரும் வெளியேறி விட்டனர் எனலாம். அமேசானின் பணி நீக்க நடவடிக்கையினால் சுமார் 18,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பணி நீக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டது பெங்களூரு மற்றும் குருகிராம் ஊழியர்கள் என்றும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications