இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
மிக குறைவான நேரத்தில் டெலிவரி, சரியான விலை ஆகியவை காரணமாக இந்நிறுவனம் இந்தியாவில் ஏராளமான வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொண்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் இந்த நிறுவனம் 24 மணி நேரமும் சேவை செய்ய ஒப்புதல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமேசான் நிறுவனம்
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா உள்பட 314 நிறுவனங்கள் தலைநகர் டெல்லியில் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
24 மணி நேர சேவை
லெப்டினன்ட் கவர்னரிடம் இருந்து அறிவிப்பு வெளியான உடன் அமேசான் மூலம் பொருள்களை டெல்லியில் உள்ள பொதுமக்கள் இரவு முழுவதும் டெலிவரி பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்புதல்
தலைநகர் டெல்லியில் தங்களது வணிகத்தை அதிகப்படுத்த 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என அமேசான் உள்பட 314 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தற்போது அமேசான் உள்பட 314 நிறுவனங்கள் டெல்லியில் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி கவர்னர்
இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் விகே சக்சேனா அவர்களிடம் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் தங்கள் சேவையை அதிகப்படுத்தவும் முதலீட்டை அதிகப்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்யவும் 24 மணி நேர சேவை தங்களுக்கு உதவும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு 24 மணி நேர எப்போது?
அனேகமாக அடுத்த வாரம் முதல் டெல்லியில் ஹோட்டல்கள், உணவகங்கள், மருந்துகள் உள்பட முக்கிய பொருள்கள் ஆன்லைன் மூலம் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிகிறது. டெல்லி மட்டுமின்றி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் விரைவில் 24 மணி நேர சேவைக்கான ஒப்புதலை பெற திட்டமிட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications